எங்களுக்கு முதல் அனுபவம். கற்றுக்கொண்டோம் OSK ஒருங்கிணைப்பாளர் A.J.ஜியாவுதீன் அறிக்கை.

அதிரை டுடே:பிப்.19

அதிரையில் நகராட்சி மன்ற தேர்தல்  சிறப்பாக நடந்துமுடிந்துள்ளது. 60 %  மக்கள் வாக்களித்துள்ளதாக, தெரிகிறது. மீதமுள்ள மக்களுக்கு சரியான முறையில் வாக்கு சீட்டு முறையை, முறையாக கொடுக்கவில்லை என்பதை அறியமுடிகிறது.

ஆளுங்கட்சியில் உள்ளவர்களுக்கு மட்டும்  வாக்காள பூத் சிலிப்  கைவசம் எவ்வாறு வந்தது என்ற கேள்விமட்டும்  எழாமல்  இல்லை. ஜனநாயக வாக்கிற்கு பணம் தராமல்  வெல்ல முடியாது என நினைத்தார்களோ என்னவோ.

படுஜோராக  வாக்குக்கு  விலை நிர்ணயம் செய்யபட்டு வாக்காளர்களுக்கு  பணம் பட்டுவாடா செய்துள்ளதை அறிய முடிகிறது. இந்த வகையில் ஆளும் கட்சியாக திமுக வாக இருந்தால் என்னெ அதிமுகவாக இருந்தால் என்னெ இவ்விஷயத்தில் இருவரும் சளைத்தவர்கள் அல்ல.


இருப்பினும் மேன்மக்கள்  விலைபோகாமல் ஒற்றுமையின் அவசியத்தை புரிந்துக்கொண்டவர்கள்  OSK  கூட்டமைப்பிற்கு வாக்கு  செலுத்தியுள்ளனர்.

இம்முறை திமுக அதிமுக, ஒரு சில இடங்களில்  தோல்வியை தழும்  என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. வென்றால் மகிழ்ச்சி, தோற்றால் பயிற்சி, தொடரும் எம் முயற்சி.

எதி்ர்காலத்தில் பணநாயகத்தை வீழ்த்தி ஜனநாயகத்தையும் ஒற்றுமையையும் வலியுறுத்தி தொடர்ந்து முயல்வோம் . இந்த தேர்தல் எங்களுக்கு முதல் அனுபவம். கற்றுக்கொண்டோம் இம்முறை. அடுத்தமுறை இறைவன் நாடிநால் தோற்கடித்து மொத்தமாக வீழ்த்துவோம் என ஒன்றுபட்ட சமுதாய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் A.J.ஜியாவுதீன் தெரிவித்தார்.

Post a Comment

1 Comments

'/>