அதிரையில் மஜக முயற்சியில் மூன்று பேர் விடுதலை.

 அதிரை டுடே:டிச.28

அதிரையில் நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வை தொடர்ந்து எழுந்த பதட்டம் தணிந்து வருகிறது.

மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் மாவட்ட Sp யிடம் பேசிய பிறகு காவல்துறையின்  நெருக்கடிகள் குறைக்கப்பட்டு குற்றவாளிகளை கைது செய்யும் முயற்சி தொடர்ந்தது. 

இந்நிலையில் மஜக துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா இன்று இரண்டாவது முறையாக அதிரை வருகை தந்து பல தரப்பினரையும் சந்தித்து பேசினார் 

இரவு மஜக மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகளுடன் சென்று DSP அவர்கனை சந்தித்து பேசினார். CC TV யில் உள்ள சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்வதை வரவேற்பதாக கூறிய அவர்,கைது செய்யப்பட்டவர்களில் உள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார். 

விசாரித்து இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறிய DSP அவர்கள் இரவு 10:30 மணிக்கு மஜக நிர்வாகிகளிடம் மூன்று அப்பாவிகளையும் ஒப்படைத்தனர் காவல்துறை. 

மூவரையும் அவர்களின் வீடுகளில் சென்று மஜக நிர்வாகிகள் ஒப்படைத்தனர்.

Post a Comment

0 Comments

'/>