அதிரை டுடே:டிச.26
அதிராம்பட்டினத்தில் இன்று ரேஷன் கடை ஊழியர் கொல்லப்பட்டதை தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. கொலை தொடர்பாக CC TV கேமராவில் உள்ள குற்றவாளிகள் 15 பேரை போலிஸ் தேடுகிறது.
இச்சம்பவம் குறித்து மஜக பொதுச் செயலளார் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட மஜக மாவட்ட செயளாலர் அதிரை.ஷேக் தகவல் கொடுத்தார். அதனை தொடர்ந்து தஞ்சை மாவட்ட Sp யை தொடர்பு கொண்ட மு. தமிமுன் அன்சாரி MLA அவர்கள், நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றும், அவ்வூர் ஜமாத்தினர் குற்றவாளிகள் கைது செய்யப்பட முழு ஒத்துழைப்பு தர உள்ளதை கூறினார். மேலும் காவல்துறை அப்பகுதி மக்களுக்கு இரவு நேர நெருக்கடிகள் கொடுப்பதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டார்.
ஜமாத்தினரை தொடர்பு கொண்ட மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நிலைமைகளை கேட்டறிந்தார். அதிரை மஜகவினரை ஜமாத்துடன் இணைந்து சுமூகமான நிலை ஏற்பட உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் அவர்கள் கவனமெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 Comments