பட்டுக்கோட்டையில் கடைத்தெருவில் வாலிபர் வெட்டி படுகொலை..!
பட்டுக்கோட்டை ஜனவரி.04
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கண்டியன் தெரு ஆற்றுக்கரை பகுதியில் வசித்து வருபவர் சிரஞ்சீவி வயது 35 இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் பட்டுக்கோட்டை அருகே துவரங்குறிச்சி கிராமத்தில் பிராய்லர் கோழிக்கறி கடை நடத்தி வருகிறார் இவர் இன்று திங்கட்கிழமை மாலை ஐயப்பன் கோவில் செல்வதற்காக சாமான்கள் வாங்குவதற்காக பட்டுக்கோட்டை கடைத்தெருவிற்கு வந்துள்ளார். பெரிய தெரு கடைத்தெருவில் வந்தபோது எதிரே வந்த இரண்டு நபர்கள் பட்டாக்கத்தி போன்ற ஆயுதங்களுடன் வந்து கண்டம் துண்டமாக வெட்டி நடுரோட்டில் போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர் . இது பற்றி அக்கம் பக்கம் இருந்தவர்கள் பட்டுக்கோட்டை நகர காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தும் போலீசார் வந்து இறந்து கிடந்த சிரஞ்சீவியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இரண்டு பட்டாக்கத்தி வாலுடன் சென்ற கொலைகாரர்களை போலீசார் தேடி சென்றுள்ளனர்.
பட்டுக்கோட்டை மிக முக்கியமான கடை தெருவில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக இருக்கிறது அந்த பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டது
0 Comments