தேர்தலுக்கு முன்பே வென்று விட்டோம் மஜக மண்டல நிர்வாகி கருத்து


 அதிரை டுடே:பிப்.20

அன்பான சமுதாய சொந்தங்களே உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக..!

நடந்து முடிந்த நகராட்சி தேர்தலில் நேர்மையாக வாக்கு செலுத்திய அத்துனை மக்களுக்கும் எனது வாழ்த்துக்கள். தேர்தல் முந்தைய நாள் தொடங்கிய பணபட்டு வாடா தேர்தல் நாள் வரை தொடர்ந்தது என்றால் மிகையாகாது இந்த பணங்கள் எல்லாம் மக்கள் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் போது வெளியே வரவில்லை. அப்பொழுது அது அவர்களுக்கு தேவையில்லை என்று எண்ணி இருப்பார்கள் போல இப்பொழுது பதவியை அடைய அதை பயன்படுத்துகிறார்கள். என்பதை மக்கள் உணர வேண்டும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் உங்களுக்கு கொடுத்தார் களா சிந்திக்கும் ஆற்றல் பெற்ற மக்கள் இதை எல்லாம் சிந்தித்து வாக்களித்தார்கள்..! 

உங்களை ஏமாற்றி அவர்கள் வாழ்வை செழுமை ஆக்கிக்கொள்ள  மணல் வியாபாரத்தில் கொள்ளையடிக்க வடிகால் வாய்க்கால்களை மூடி அவர்கள் வீட்டு சொத்து போல் கட்டடங்கள் கட்டிக்கொள்ள கட்டப்பஞ்சாயத்து செய்ய  உங்கள் காரியம் முடிக்க என்று உங்களிடம் கையூட்டு பெற தேர்தல் முதலீடு செய்திருக்கிறார்கள் பணத்தை வாரி இறைக்கிறார்கள்.

மஜக இந்த தேர்தலில் சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்த  சமுதாய கூட்டமைப்பு கூட்டணியில் களம் அமைத்தோம் நாங்கள்  உங்களுக்காக உழைத்திட வந்தோம் என்று  கொள்கை திட்டங்களை முன் வைத்து தேர்தலை சந்தித்தோம்.

எங்களின் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு வாக்கிற்க்கு 1ரூபாய் கூட செலவு செய்யவில்லை இறைவன் சாட்சியாக பண முதலைகளை மனிதநேய ஜனநாயக கட்சி வேட்பாளராக நிறுத்தவில்லை. மாறாக படித்த இளைஞர், சமுதாய சிந்தனை வாதிகளையே நிருத்தியது. பதவிக்காக மட்டும் நாங்கள் உங்களை நாடி வரவில்லை ஒவ்வோரு பிரச்சனையின் போதும் சமுதாய மக்களுடன் இருந்துள்ளோம். அந்த தார்மீக உரிமையுடன் உங்களை நாடி வந்தோம்.!



அதிகாரத்திற்க்கு நாங்கள் போட்டியிடவில்லை சமுதாய அங்கிகாரம் பெற வேண்டியே களம் இறங்கினோம். சமுதாயத்திற்க்கு உழைக்கும் எங்களை ஒரு போதும் சமுதாய மக்கள் புறக்கணிக்க மாட்டார்கள் என்று ஆளும் ஆண்ட கட்சிகளுக்கும் தெரியபடுத்தவே களம் அமைத்தோம் அதில் தற்பொழுது வெற்றியும் கண்டுள்ளோம். ஆம் தேர்தலில் மஜக வேட்பாளர் களை  எதிர்த்து நின்ற வேட்பாளர்கள் அனைவரும் கட்சி பாகுபாடு இல்லாமல்  ஓட்டு க்கு பணத்தை வாரி வழங்கினார்கள் இதை விட ஒருபடி மேலே போன கட்சி ஒன்று பல கள்ள விளையாட்டு களும் விளையாடி உள்ளனர். தேவை அவசியம் ஏற்படும் பட்சத்தில் தோலுரிப்போம் மஜக தனது முதல் நகராட்சி தேர்தலிலே 50 ஆண்டு பழமையான கட்சிகளின் உறக்கத்தை கெடுத்து விட்டது என்றால் மிகையாகாது இதுவே எங்களின் முதல் வெற்றி.! 

இந்த நேரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொதுச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நேர்மை அரசியல் என்றால் என்ன என்று தமிழகத்திற்க்கு பாடம் எடுத்த மு.தமிமுன் அன்சாரி அவர்கள்  பேசியது நியாபகம் வருகிறது. 

அரசியலிலே சாதரண வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் கத்துக்குட்டிகள் தான் ஆனால் பெரிய தலைகள் மிரளும் அரசியலை செய்யும் வல்லமை மிக்க கூடியவர்கள் நாங்கள்.! 

 இதை இதை அதிரை மஜக சாத்திய படுத்தும் விதத்தில் அதிரை எங்களின் கோட்டை என்று மார்தட்டியவர்கள் எல்லாம் இன்று ஓட்டுக்கு நோட்டு என்று பணம் கொடுத்து வாக்கு வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதுவே அதிரையில் மஜக கூட்டணி தேர்தலுக்கு முன்பே வென்று விட்டதற்க்கு சமம்.!

கடந்த சட்டமன்ற தேர்தலில் பாசிச சக்திகளுக்கு இடம் தந்துவிட கூடாது என்று பதவி இல்லாது இருந்தாலும் சரி சமுதாய மக்களின் மனசாட்சி யாக ஒலிக்க வேண்டும் என்று தியாக பூர்வமாக நிபந்தனை இன்றி சமுதாயம் சார்ந்த கோரிக்கையுடன் ஆதாரவு அளிக்க முன் வந்தவர் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி யின் கட்சி இந்த மனிதநேய ஜனநாயக கட்சி என்பதை நீங்கள் மறந்து இருக்க மாட்டீர்கள். அதனால் இன்று சமுதாய பிரதிநிதிகள் இல்லாத சட்டசபை என்றும் எப்பொழுது சட்டசபை கூடினாலும் இந்த செய்தி சமூக வலைதளங்களில் காணப்படுவது மறுக்க முடியாத உண்மை.!


10 ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் சிறை வாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த சட்டமன்ற தேர்தலில் தியாக மனப்பான்மை உடன் மஜக மாநில பொதுச் செயலாளர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள் திமுக ஆதரவுக்கு முன் வைத்த முக்கிய கோரிக்கை சிறைவாசிகள் முன் விடுதலை நிறைவேற்ற வேண்டும் என்பதே அதை அமல்படுத்த வேண்டி கோவையில் ஜன.8  அன்று சாதி மத வேறுபாடின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறை வாசிகளை முன் விடுதலை செய்ய கோரி கோவையில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடந்த மக்கள் போரட்டத்தில் 100 நாள் கோவை பிரகடனம் செய்யப்பட்டது.

திமுக அரசுக்கு அழுத்தம் தர அல்ல அவகாசம் தர தமிழக அரசு மத சாதி பாகுபாடு காட்டி விடுதலை மறுக்கும் பட்சத்தில் மக்களை திரட்டி தலை நகரில் அடுத்த கட்டமாக தேசிய சிறுபான்மை அக்கறை கொண்ட தலைவர்களை திரட்டி பெரும் போரட்டத்தை முன் எடுப்போம். என்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பிரகடனம் செய்தார் அதற்க்கு மீதம் 57 நாட்களே உள்ளது. எனவே தாய் உள்ளத்தோடு தமிழக அரசு அவர்களை விடுதலை செய்ய முன் வர வேண்டும்.

57நாட்கள் முன்  முன் விடுதலையில் பாகுபாடு காட்டும் பட்சத்தில் தேசிய அளவில் தலைவர்களை திரட்டி மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் மு‌.தமிமுன் அன்சாரி தலைமையில் பெரும் மக்கள் போராட்டம் நடத்தும் ஆகவே அந்த போராட்ட களத்திற்க்கு மனிதநேய ஜனநாயக கட்சி செயல் வீரார்களும் சமுதாய சொந்தங்களும் தயார் ஆக வேண்டும்.

தேர்தல் காலத்தில் சுற்றி வரும் சீசன் பறவைகள் அல்ல நாங்கள் வெற்றியோ தோல்வியோ இந்த சமுதாய மக்களுக்காக என்றும் உழைக்க கூடியவர்கள் வென்றால் நகராட்சி நிர்வாகம் உள்ளே சென்று தேவைகளை  செய்வோம் தோல்வி அடைந்தால் சாலைகளை முடக்கி உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வோம்.! 

கமிஷன் இல்லா கரப்ஷன் இல்லா நகராட்சி நிர்வாகம் அமைய விரும்பும் மக்கள் எங்களை ஆதரித்து இருப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இறைவன் நாடினால் அதிரை நகராட்சியை மனிதநேய ஜனநாயக கட்சி  வேட்பாளர்களும் வென்று அலங்கரிப்பார்கள்..!


எனது 17வது வார்டில் பெரும் ஒத்துழைப்பு தந்த திலகர் தெரு வாசிகளுக்கும் பண பலத்தை நம்பி பின்னே சென்ற சிலருக்கு மத்தியில் நட்புக்காக மஜக வேட்பாளர்க்காக உழைத்த அஜ்மீர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..!

அதிரை மஜக வெற்றிக்காக உழைத்த வாக்களித்த 05,17,24 வார்டு மக்களுக்கும் சமூக ஆர்வலர் களுக்கும்  எமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்..!

அதிரை மனிதநேய ஜனநாயக கட்சி செயல் வீரார்களின் தேர்தல் நேர உழைப்பு ஒத்துழைப்பும் அளப்பரியது மாவட்ட செயலாளர் சேக் மற்றும் நகர நிர்வாகிகள் பணிகள் மேன்மேலும் சிறக்க பிரார்த்திக்கின்றேன்.! எங்களுக்காக உழைத்த கூட்டணி கட்சிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.!

உங்களுடைய வாக்கை செலுத்திய ஆதரவு தந்த சமுதாய சொந்தங்களுக்கு மன மார்ந்த நன்றிகளையும் எங்களின் வெற்றிக்கும் துவா செய்யுங்கள்.!

அதிரை ராஜா

செயற்குழு உறுப்பினர்

குவைத் மண்டலம்

Post a Comment

0 Comments

'/>