நாம் கேலியும் கிண்டலும் செய்து கொண்டு உள்ளோம் ஆனால் பாஜக உள்ளாட்சி தேர்தலில் 22 மாநகராட்சி வார்டுகள் ,56 நகராட்சி வார்டுகள் உட்பட 308 இடங்களை கைப்பற்றி உள்ளது பல இடங்களில் இரண்டாவது இடத்தில் வந்து உள்ளது.
காந்தியை கொன்றது சரி தான் என பேசிய பாசிசவாதி பெண்ணை சென்னையில் மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளனர்.
இதில் மிக பெரிய படிப்பினைகள் இருக்கிறது சிந்தாந்த ரீதியாக தத்துவத்தை உடைக்காமல் பாசிசத்தை வீழ்த்த முடியாது.
எந்த கூட்டணி இல்லை சிறு கட்சிகள் கூட உடன் இல்லாமல் இந்த வெற்றி பாஜக பெற்று உள்ளது என்பது மிக பெரிய அதிர்ச்சியை தருகிறது.
அண்ணாமலை தலைவராக வந்ததில் இருந்து பாஜக தமிழகத்தில் பட்டி தொட்டி எல்லாம் போய் கொண்டு உள்ளது, அவரது வியூகம் தமிழகத்தில் பாஜக கால் பதித்து தான் உள்ளது என்ற உண்மையை நாம் மறுக்க முடியாது.
இஸ்லாமிய சமூதாயம் இன்னும் கேலியும் கிண்டலும் செய்து கொண்டு, சொந்த சமூதாயத்தில் விமர்சனம் செய்து கொண்டு பொது அரசியலின் முக்கியத்துவம் தெரியாமல் இருப்பது தான் வேதனை.
சமூதாயத்திற்காக களமாடும் அனைவரும் ஏதோ அரசியல் கட்சிகளின் பிடியில் உள்ளது போல நிலைமை ஆகி விட்டது அடுத்த தலைமுறை வளர்ச்சி குறித்து சிந்திக்காமல் இந்த தலைமுறை கடந்து கொண்டு உள்ளது.
இறை நம்பிக்கை வளர்ப்போம், மக்களை ஈமானிய உறுதி உடன் அரசியல் படுத்துவோம்.
A.யாசர் அராபத்.
INTJ மாநில ஊடக பிரிவு செயளாலர்
0 Comments