ஊடகங்கள் வழியே மாஃபியா..? ஜியாவூதீன் விளாசல்..!
சீமான் உடன் இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள் சந்திப்பு..!
தன் மீதான அனைத்து விதமான விமர்சனங்களுக்கு முற்று புள்ளி வைத்தார் சீமான்.
இந்த மாஃபியாக்களின் இலக்கு மார்க்கத்தின் அடிப்படைகளில் ஊடுறுவி அந்த இடைவெளியில் சமூகங்களுக்கு இடையே கலகங்களையும் வெறுப்புகளையும் விதைப்பது.
இதற்கு வசதியாக தங்கள் ஊடகங்களின் பெயரை பிறை, நட்சத்திரம், எரிகல் என்றோ இடி, மின்னல் முசீபத்து அல்லது காடாத்து என்று உள்ளூர் ஸ்லாங்கில் வைத்துக் கொள்வது.
முன்பெல்லாம் RSS இந்து மதத்திற்கு ஆபத்து என்று கூறி இந்து முஸ்லிம்களிடையே வெறுப்பை விதைத்தது போல், காவி கும்பல் முஸ்லீம் வேடமிட்டு கோயினுள் மாட்டுக்கரியை வீசுவது போல இந்த மாஃபியாக்கள் இஸ்லாத்திற்கு ஆபத்து என்று கூறி அதே தோசையை திருப்பி போடுகிறார்கள்.
சம்பவம் என்னன்னா சமீப காலமாக அதிரை நாம் தமிழர் கட்சியினர் பற்றி பல அவதூறுகளையும், பொய்களையும் தொடர்ந்து பரப்பி அவர்களை சீண்டி விட்டு அவர்கள் கொடுக்கும் பதிலை இஸ்லாத்திற்கு விரோதமாக சொல்வதாக திரிக்கிறார்கள்.
உதாரணத்திற்கு அன்மையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சதாம் ஹுசேன் என்பவர் இஸ்லாத்துக்கு விரோதமானா சில வாசகங்களை கூறி திருமணம் செய்து கொண்டது சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த நபரை முன் பின் அறியாத இந்த ஜீவராசிகள் எல்லாம் குய்யோ முறையோ என்று ஒரே கூக்குரல். என்னமோ பெரிய வணக்கசாலியாக இருந்த அவரை நாம் தமிழர் கட்சி இப்படி மாற்றி விட்டது போல் அதிகப்படியான அவதூரும், பொய் பிரச்சாரமும் செய்து கொண்டிருந்தனர். சம்மந்த பட்ட சதாம் ஹுசேன் என்பவன் எனக்கு எப்போதுமே இஸ்லாம் மார்க்கத்தில் ஈடுபாடு இல்லை என்ற போனில் கூறிய நிலையிலும் இவர்கள் விடாப்பிடியாக இந்த விஷமப் பிரச்சாரத்தை பரப்பினர்.
(சதாம் திருமண காட்சி)
அதே அந்த கரை படிந்த ஊடகம் சமீபத்தில் மதம் மாறியது போல் போட்டோ வெளியான சமயம், இவரையும் நாம் தமிழர் கட்சியினர் மதம் மாற்றுகிறார்கள் என்கிற அப்பட்டமான அவதூறு செய்தியை *உலமாக்களும் வேண்டுகோள்* என்கிற தலைப்பில் வெளியிட்டது. ஆனால் அந்த நபருக்கும் நாதகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இந்த சம்பவத்தையும் மேற்கோள் காட்டியே இவர்களின் பதிவுகள் இருந்தன.
(கோயில் பின்னனியில் தாஜுதீன் படம், இஸ்லாமியர்களை நாதக மதம் மாற்றுவதாக அதிரை பிறை பதிவு)
தற்போது இந்த சம்பவத்திற்கான மறுப்பு ஒன்றை அந்த அதிரை வாலிபர் ஒரு உலமாவுடன் இணைந்து வெளியிட்டுள்ளார்.
(மறுப்பு வாக்கு மூலம், உலமா முடிவு)
இப்படியாக இல்லாத ஒன்றை இவர்களே கட்டமைத்தும் உண்மையான விஷயங்களை திரித்தும் பொது ஊடகங்களில் அதிரை பெயரோடு பரப்பி வருகின்றனர்.
மேலும் உள்ளூர் நாதகவினரை சீண்டுவதாக கூறி இந்துக்கள், தமிழர்களின் வழிபாட்டு விஷயங்களை கிண்டலடித்தும் வருகின்றனர். இதை முஸ்லிமல்லாதவர்களும் பார்த்து கொதிப்படைந்து வருகின்றனர்.
இவர்களின் நோக்கம் சமூகங்களிடையே வெறுப்பை விதைத்து கலகங்களை ஏற்படுத்தி அதில் அரசியல் ஆதாயம் அடைய நினைக்கும் மலிவு அரசியல் வாதிகளுக்கு துணை நிற்பதுதான் இந்த கரை.
சமூகங்களுக்கிடையேயான பரஸ்பர சகிப்பு, புரிந்துணர்வுதான் அமைதியான சூழலுக்கு வழிவகுக்கும்.
இவர்களின் சூழ்ச்சிக்கு மக்கள் பலியாகி விடாமல் இவர்களை புறக்கணிக்க வேண்டும்.
அல்லாஹ்வின் மார்க்கத்தை அல்லாஹ்வே பாதுகாப்பான்.
இவர்கள் இஸ்லாத்தின் பாதுகாவலர்கள் போன்று தம்மை முன்னிறுத்திக் கொண்டு விதைப்பதெல்லாம் மனிதகுல வெறுப்புதான். இன்றைய சூழலில் இது ஆபத்தானது. அவசியமற்றது.
வன்முறைப் பாதைக்கு மக்களை வழி நடத்திச் செல்லும் சில விபரீத அரசியல்வாதிகளின் ஏஜெண்ட்டுகள்தான் இந்த விஷம ஊடகவியலாளர்கள் என்பது மிக விரைவில் அம்பலமாகும்.
இவர்களிடமிருந்து விலகி இருப்பதே நம் சமூக இளைஞர்களுக்கும் சமுதாயத்துக்கும் நல்லது.
இதன் காரணமாக சமூக வலைதளங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளை விளங்கி கொண்டு, அனைத்து கூட்டமைப்பு சார்பிலும், உலமாக்கலும் அரசியலில் பயணித்து வரும் சமூக சிந்தனையாளர்களும் சகோதரர் சீமானை சந்தித்து, விளக்கம் பெற்று, அதனின் உண்மைதன்மையை மக்களுக்கு காணொலி மூலமாக வெளிக்கொண்டு வருவார்கள் என எதிர்பார்ப்போம்.
இவன்.
ஜியாவுதின்.
நகரச்செயலாளர்.
அதிராம்பட்டிணம்
நாம் தமிழர் கட்சி.
1 Comments
This comment has been removed by the author.
ReplyDelete