அவதூறு வழக்குகள் ரத்து:நீதிபதி அப்துல் குத்தூஸ் அதிரடி!!




அதிரை டுடே : மே22
கடந்த 2012ஆம் ஆண்டு கீழ்கானும் பத்திரிக்கைகள் மீது அவதூறு பரப்புகிறார்கள் என அரசாணை பிறப்பிக்கப்பட்டு வழக்கு பதியப்பட்டது.. முரசொலி( 20வழக்குகள்),நக்கீரன், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, தினகரன், தினமலர், நக்கீரன்(2வழக்குகள்) ஆகிய  பத்திரிக்கைகள் மீது வழக்கு பதியப்பட்டது..
அதை தொடர்ந்து தமிழக அரசின் அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி அரசியல் கட்சியினர் வழக்கு தொடர்ந்தனர்... இது மக்கள் பிரதிநிதிகளின் வழக்கு என்பதால் தனியாகப் பிரிக்கப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிகேசலு முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்திருந்தது...
இந்நிலையில் தங்கள் மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கூறியும் அரசாணையை ரத்து செய்யக்கூறியும் முரசொலி தரப்பில் முரசொலி செல்வம், தி இந்து நாளேடு தரப்பில் என். ராம் மற்றும்  தி டைம்ஸ் ஆஃப் இந்தியா தரப்பில் சுனில் நாயர், தினமலர் தரப்பில் ஆர். கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
எட்டு ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்கை நேற்று நீதிபதி அப்துல் குத்தூஸ் அதிரடியாக பத்திரிக்கைகள் மீதான அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்தார்..



உங்களுக்கான உண்மைச் செய்திகளுடன்!!  அதிரை டுடே.

Post a Comment

0 Comments

'/>