பாகிஸ்தானில் விமான விபத்து:66பேர் உயிர் பலி!!

அதிரை டுடே, மே23

பாகிஸ்தான் நாட்டில் கராச்சி பகுதியில் கடந்த மே22 அன்று விமானம் தரையிறங்குவதில் கோளாறு ஏற்பட்டு அருகிலிருந்த அடுக்குமாடி கட்டிடங்கள் மீது விழுந்து நொறுங்கி எரிந்து விபத்துக்குள்ளானது.
நேற்றைய தினம் லாகூரில் 91 பயணிகள் 8 விமான ஊழியர்களுடன்  ஏர்பஸ் ஏர்'320" சர்வதேச பயணிகள் விமானம் வெள்ளிக்கிழமையன்று கராச்சி நகருக்கு புறப்பட்டு சென்றது.

கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தை அடையும் போது தரையிறக்குவதில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
விமானத்தை இயக்கி வந்த விமானி இது குறித்து போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தந்துள்ளார். அருகில் உள்ள இரண்டு விமான நிலையங்களில் ஏதாவது ஒன்றில் தரையிறக்குங்கள் என அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் துரதிஷ்டவசமாக விமான நிலையம் அடையும் முன்னரே இரண்டு இறக்கைகளிலும் தீயுடன் காணப்பட்டதாக விபத்தை நேரில் பார்த்தவர் கூறியுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பின் மேல் விழுந்து நொறுங்கி பயணிகள், குடியிருப்பு வாசிகள் அனைவரும் விபத்தில் சிக்கிக் கொண்டனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் மற்றும் சிந்து இரானுவப்படை வீரர்களும், அதிவிரைவு இரானுவப்படை வீரர்களும் விரைந்து மீட்புபணியில் ஈடுபட்டு 30பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர் இதில் பெரும்பாலானோர் தீக்காயம் ஏற்பட்டிருந்தனர். அதிர்ஷ்டவசமாக பயணம் செய்த இரு பயணிகள் உயிர் தப்பினர்.இதுகுறித்து அந்நாட்டு விமான செய்திதொடர்பாளர் முஹமது ஹபீஸ் கூறுகையில் பிற்பகல் 2.30 மணிக்கு விமானம் தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டிருந்தது. மேலும்  இச்சம்ப
அந்நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அதிபர் ஆரிஃப் ஆல்வி மற்றும் பிரதமர் இம்ரான் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
மேலும் பிரதமர் இம்ரான் இத்துயர சம்பவம் குறித்து விசாரணை செய்ய 4 பேர் கொண்ட தனிப்படை விசாரணைக்குழு அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதே போல் 2016 ஆம் ஆண்டும் பாகிஸ்தானில் நடந்த விமான விபத்தில் 49 பேர் பயணிகளும் பலியானது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவங்கள் மிகவும் வேதனையானது.

Post a Comment

0 Comments

'/>