நாளை தமிழகத்தில் நோன்பு பெருநாள்...!

ஹிஜ்ரி 1441 ரமளானின் பிறை 29 மே 22,2020 வெள்ளி இரவு ஷவ்வால் பிறை பார்ப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தோம். எனினும் பிறை பார்க்கப்பட்ட நம்பகமான தகவல்கள் நமக்கு கிடைக்காத நிலையில் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து மே 24,2020 ஞாயிற்றுக்கிழமை பெருநாளை கொண்டாடுமாறு JAQH தலைமை அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆப்ரிக்காவின் பல நாடுகளிலும் பரவலாக மே 22,2020 வெள்ளி இரவு ஷவ்வால் தலைப்பிறை பார்க்கப்பட்டதாக உறுதியான தகவல்கள் கிடைத்திருக்கின்றன.இந்த தகவல்களை அந்த நாடுகளின் உலமா கவுன்சில்களும் உறுதிப்படுத்தி இருக்கின்றன. இந்த தகவல் தாமதமாக நம்மை அடைந்த காரணத்தினால் சுன்னாவின் அடிப்படையில், இன்றைய மே 23,2020
நோன்பை  விடுமாறும் நாளை உங்கள் வீடுகளில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் 
S.செய்யித் அலி பைசி,
ஒருங்கிணைப்பாளர்,
ஜம்யிய்யதுல் உலமா,
JAQH, தமிழ்நாடு
23.05.2020

Post a Comment

0 Comments

'/>