அதிரை மஜகவினர் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு.


 அதிரை டுடே:பிப்.17

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதிரை மனிதநேய ஜனநாயக கட்சியினர் SDPI, OSK ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து 05, 17, 24 ஆகிய மூன்று வார்டுகளில் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் 05, 17 ஆகிய வார்டுகளில் திமுக, மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஆதாரங்களுடன் இன்று தஞ்சை தெற்கு மாவட்ட செயளாலர் சேக் அவர்கள் தலைமையில் அதிரை நகராட்சியில் தேர்தல் அலுவலரிடம் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர். அதனடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் அலுவலர் கூறியுள்ளதாக மஜகவினர் தெரிவித்தனர். உடன் மாவட்ட, நகர நிர்வாகிகள் இருந்தனர்.


Post a Comment

0 Comments

'/>