ஹிஜாப் விவகாரம்: குவைத் பாராளுமன்றம் இந்தியாவிற்கு கடும் கண்டனம்.


 அதிரை டுடே:பிப்.17

கர்நாடகத்தில் கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளில் சீருடையை கட்டாயமாக்க வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவிட்டது. ஹிஜாப் தடையை எதிர்த்து கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வழக்கு நடைபெற்று வருகிறது

குவைத் பாராளுமன்றத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்து அதன் விபரம் பின்வருமாறு.

இந்தியாவில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு எதிராக மதம் அடையாளத்தை கைவிடும்படி கட்டாயப்படுத்துகிறது. மேலும், இந்திய அதிகாரிகளின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் சாசனங்களை மீறுவதாகும்,

தனிநபர்கள் தங்கள் மத நம்பிக்கைகளை வெளிப்படுத்துவதற்கு உரிமை இருக்கிறது. இது தொடர்புடைய அமைப்புகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  மேற்கூறியவற்றின் அடிப்படையிலும், நமது மனிதாபிமான மற்றும் இஸ்லாமியப் பொறுப்புகளின் அடிப்படையிலும், 200 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்களுக்கு எதிராக இந்திய அதிகாரிகள் கடைப்பிடிக்கும் அடக்குமுறைக்கு, குவைத் தேசிய சட்டமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியாவின் இந்த நடவடிக்கையை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க சர்வதேச அமைப்புகளை அழைக்கிறோம்.

இந்திய முஸ்லிம் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை மேற்கொள்ளுமாறு இஸ்லாமிய நாடுகளை குவைத் வெளியுறவு அமைச்சகத்தின் மூலம் நாங்கள் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். என்று குவைத் பாராளுமன்றத்தில் தீர்மானம் ஏற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று ஹிஜாபுக்கு ஆதரவாக குவைத் இந்திய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments

'/>