விழிப்புணர்வுக்காக...! சிந்தித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்..!


 அதிரை டுடே:பிப்.18

விழிப்புணர்வுக்காக...! சிந்தித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்..!

வார்டு கவுன்சிலர் என்ற பதவி!!

கவுன்சிலர் என்பவர்கள்  வார்டில் உள்ள அனைத்து  அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தக் கூடிய பணிகளை சிறப்பாக  செய்பவராக இருக்க வேண்டும் என்பதே  அனைவருடைய  அவா......

சிந்தித்து வாக்களிப்போம்!!
          

வார்டு கவுன்சிலர்  என்பவர் மக்கள் எளிதில் அணுகக் கூடியவராக எளிமையான நபராக இருக்க வேண்டும். நல்ல குணம் வாய்ந்த மக்கள் நலனில் அக்கறையுள்ள  சமுதாய சிந்தனையுள்ள படித்த நபரை நாம்  தேர்ந்தெடுத்தால் நாம் வாழும் பகுதியின் சூழலும் சுகாதாரமும் மேம்படும். 

ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் வாங்குவதும் சட்டப்படி குற்றம். அதே நேரத்தில் வேட்பாளர்கள் கொடுக்கும் 100, 200 ,500 ரூபாய்க்கு ஆசைப்பட்டு தவறான நபர்களை நாம் தேர்ந்தெடுத்து விட்டு ஐந்து வருடத்திற்கு வருத்தப்பட்டு பயனில்லை.

எனவே நல்லவர்களையே  தேர்ந்தெடுங்கள் அதே நேரத்தில் யாரும்  ஓட்டு போடாமல் இருந்து விட கூடாது. மறக்காமல் தங்களது வாக்குகளை பதிவு செய்து. ஜனநாயக கடமையை நிறைவோற்றுங்கள்.

வாக்கு என்பது நம் உரிமை.!
வாக்களிப்பது நமது  கடமை.!!
வாருங்கள் வாக்களிப்போம்.!!!
ஒற்றை விரலால் புரட்சி செய்து.!!!!
ஜனநாயகம் காப்போம்!!!!!

Post a Comment

0 Comments

'/>