அதிரை டுடே:பிப்.18
அதிரையில் காலம் காலமாக திமுக கோட்டையாக இருந்த வார்டின் அவல நிலை பேரூராட்சி ஆக இருந்த போது 11 வது வார்டு தற்பொழுது நகராட்சி 17வது வார்டு மாநிலத்தில் ஆட்சியில் திமுக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த வார்டு திமுகவின் வெற்றி வார்டாகவே இருந்து வந்துள்ளது. பல முறை வென்றும் கழிவுநீர் வாய்க்கால் கூட முறைபடுத்தாத ஆளும் கட்சி மீது அந்த வார்டு மக்கள் கோவமாக உள்ளதை அறிய முடிகிறது..!
இது சம்மந்தமாக மனிதநேய ஜனநாயக கட்சி இளம் வேட்பாளர். ஹாஜா மர்ஜுக் B.COM அவர்களிடம் பேசிய போது
இந்த அவல நிலை நான் சிறுவனாக உள்ள போதில் இருந்தே கண்டு வருகிறேன். எங்கள் கட்சி சார்பாகவும் எங்கள் தெருவின் சார்பாகவும் பல முறை முந்தைய பேரூராட்சியில் மனு கொடுத்துள்ளோம். கிணற்றில் போட்ட கல் போலவே எங்களின் மனு இருந்தது கல்லாவது சத்தம் தரும் ஆனால் அதிரை பேரூராட்சி நிர்வாகத்திடம் இருந்து ஒரு மயான அமைதியே பதிலாக வந்தது.
ஹாஜா முகைதீன் மருத்துவ மனைக்கு பின்புறம் உள்ள நாரக்குட்டையின் ஒரு பகுதியில் பள்ளமாக மற்றொரு பகுதி மேடாகவும் உள்ளது.
அதற்கும் முந்தைய திமுக ஆட்சி காலத்தில் நகர திமுகவினர் தான் அரசு பணத்தில் தனியார் இடத்தை மண் அடித்து கையக படுத்த முற்பட்டனர். அந்த இடத்துக்கு சொந்தக்காரர்கள் வழக்கு தொடர்ந்து அதனாலே அங்கு பாதியில் வேலை நிருத்தபட்டது.
அந்த குட்டை மேடு பள்ளமாகி அதில் மழை நீர் தேங்கி இருந்தது இதை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியும் சில வீடுகளில் முறையாக கழிவு நீர் செல்ல வசதி யில்லாத காரணத்தால் வீட்டின் கழிவு நீர் இந்த குட்டையில் வந்து சேர்ந்து அதில் இருந்து நிரம்பி சில வீடுகளில் புகுந்து அதிரை மக்களின் பிரதான சாலை (பேருந்து நிலையத்திலிருந்து மேலத்தெரு வரை செல்லும் சாலை) வழியாக ஓடுகிறது. இது சாதாரண மழை நீர் மட்டும் அல்ல கழிவுநீர் கலந்து வருவதால் பெரும் நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இந்த பகுதி மட்டும் அல்ல எனது 17 வார்டுக்கு உட்பட்ட சேதுரோடு (பேருந்து நிலையத்திலிருந்து தரகர் தெரு இறக்கம்) பகுதியில் சாதரண மழை நேரங்களில் கூட மழை நீர் கழிவு நீர் உடன் கலந்து சாலைகளில் இருபுறமும் பெருக்கேடுத்து ஓடுகிறது. வீடுகளிலும் புகுந்து பெரும் தொந்தரவாக சேதங்களையும் ஏற்படுத்துகிறது. என்று அந்த பகுதி மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர் எங்கள் மனிதநேய ஜனநாயக கட்சி தேர்தல் அறிக்கையே முந்தைய ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். என்பது தான் ஆகையால் மஜக வேட்பாளரானா நான் 17வது வார்டில் வெற்றி பெற்றால் ஒரு மாதத்தில் இதை சரி செய்து எனது தெரு மக்களின் ஊர் மக்களின் சுகாதாரத்தையும் உருதி செய்வேன்.
திலகர் தெரு சேது ரோடு வாசிகள் மத்தியிலும் நமது தெரு வாசி படித்த இளம் வேட்பாளர் என்றும் மஜக வேட்பாளர்க்கு ஆதரவு அதிமாக உள்ளது. ஆகையால் அந்த வார்டு மக்களின் பல ஆண்டு பிரச்சனை எதிர் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என்ற எதிர் பார்ப்பில் தெருவாசிகள் உள்ளார்கள். முந்தைய கவுன்சிலர்கள் போல் இல்லாமல் இவராவது வாக்குறுதியை நிறைவேற்றுவாரா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்..!

0 Comments