அதிரை டுடே:பிப்.26
மாணவன் ஏ.அப்துல் கலாம் குடும்பத்திற்கு சென்னை சிவலிங்கபுரத்தில் அரசு சார்பில் வீடு ஒதுக்கி அதற்கான அரசானை முதல்வர் வழங்கினார்.
இணையதள தொலைக்காட்சிக்கு மனிதநேயம், மதநல்லிணக்கம் குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவன் ஏ.அப்துல்கலாம் குடும்ப நிலையை உணர்ந்து மாணவனின் பெற்றோருக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சென்னை, கலைஞர் கருணாநிதி நகர், சிவலிங்கபுரம் திட்டப் பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையினை இன்று சனிக்கிழமை மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.உடன் தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர்.
0 Comments