அதிரை டுடே:பிப்.16
கர்நாடகத்தில் கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளில் சீருடையை கட்டாயமாக்க வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவிட்டது. ஹிஜாப் தடையை எதிர்த்து கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வழக்கு நடைபெற்று வருகிறது
ஹிஜாப் விவகாரம் குறித்து உலக நாடுகளில் கண்டன குரல் எழுந்து வருகிறது. இந்நிலையில் குவைத்தில் இந்திய தூதரகம் முன்பு இன்று குவைத் குடிமக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஹிஜாபுக்கு ஆதரவாக பதாகைகளுடன் தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
நன்றி:Aljarida
0 Comments