அதிரை டுடே ஜன 21. அதிமுக முன்னாள் பொதுச் செயளாலர் திருமதி.சசிகலா அவர்களுக்கு கொரோனா தொற்று உருதி செய்யபட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி வெளியில் வர சில தினங்களே உள்ள நிலையில் கொரோனா தொற்று என்ற செய்தி சசிகலா அவர்களின் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் மூச்சு திணரல் காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்தார்.
நேற்று நள்ளிரவு முதல் அவசர பிரிவில் சிகிச்சை மேற் கொள்வதாக மருத்துவ மனை வட்டாரங்கள் தெரிவித்த நிலையில் இன்று இரவு விக்டோரியா மருத்துவமனையின் கண்கானிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா அவர்கள் சசிகலா அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதை உருதி செய்துள்ளார்.
சிறைவாசம் முடிந்து சசிகலா அவர்கள் வந்ததும் தமிழக அரசியல் களத்தில் பல மாற்றங்கள் தேர்தல் களம் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
0 Comments