நேர்க்கு நேர் மோதி வாகன விபத்து 3 பேர் மரணம்..!

கீழக்கரையில் இருந்து குவைத் செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு ஆம்னி வேனில்  இன்று காலை   500 பிளாட் பகுதியை சேர்ந்த  ஹாஜா ஷாகுல் ஹமீது (வயது52) அவரது மாமியார் ஷாஜகான் பிவீ (வயது 60) அவரது மனைவி ரூபினா,  மகள் ரஹ்மத் பாத்திமா, மகன் இனாஸ் ஆகிய 5 பேரும் வேனில் புறப்பட்டு  வந்து கொண்டிருந்தனர். கீழக்கரையை சேர்ந்த அகமது ஹசன் வயது 30 என்பவர்  வேனை ஓட்டி வந்தார்.சத்திரக்குடி அருகே தபால் சாவடி அருகே வந்தபோது எதிரே கர்நாடகாவில் இருந்து வந்த டெம்போ வேன் நேருக்கு நேர் மோதியது. இதில்  வேனில் பயணம் செய்த ஹாஜா சாகுல் ஹமீது,இவரது மாமியார்  ஷாஜகான் பீவி, டிரைவர் அகமது ஹசன் ஆகிய மூவரும்  சம்பவ இடத்தில் இறந்தனர். 
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். 

 மனைவி ரூபினா,  ரஹ்மத் நிஷா , மகன் இனாஸ்  ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 

இதுகுறித்து சத்திரக்குடி போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மறுமையில் நல் பதவி கிடைக்க அவர்களுக்காக  துஆ செய்வோம்..

Post a Comment

0 Comments

'/>