அதிரை டுடே:டிச.03
பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைமை அலுவலகம் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்திய பாஜக அரசையும் மற்றும் அமலாக்கத்துறையை கண்டித்து அதிரையில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரையில் மத்திய பாஜக அரசையும் மற்றும் அமலாக்கத்துறையயும் கண்டித்து இன்று (03.12.2020) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிரையில் நடைப்பெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் அவர்கள் தலைமை தாங்கினார் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் மர்சூக் அஹமது அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இந்த கணடன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்
கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது புஹாரி மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர் மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.
0 Comments