புரேவி புயலின் தாக்கத்தினால் பல மாவட்டங்களில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறத. புரேவி புயல் நேற்றிரவு இலங்கையில் கரையைக் கடந்தது. இதன் காரணமாக பாம்பன் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
கொட்டித் தீர்க்கும் கனமழையைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தயார் நிலையில் 209 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புரேவி புயலாக உருவெடுத்தது. நேற்று இரவு புரேவி புயல் திரிகோணமலை அருகே புயல் கரையைக் கடந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது பாம்பனுக்கு அருகில் புரேவி மையம் கொண்டுள்ளதால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
புரேவி புயல் தமிழக தென் கடலோரத்தில் கன்னியாகுமரிக்கும் பாம்பனுக்கும் இடையில் நாளைய தினம் டிசம்பர் 4 ஆம் தேதி அதிகாலையில் புயலாகக் கடக்கும். அப்போது மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
புரவி புயல் கரையைக் கடக்கும்போது தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகியவற்றில் கன மழை பொழிய வாய்ப்பிருப்பதாகவும், கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கணித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயல், மிகக் கடுமையானது. புயல் கரையை கடந்த போது, மணிக்கு 120 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசியது. அதே நேரத்தில் புரேவி புயலின் தீவிரத்தைத் தாண்டி வலுப்பெறாது என்பதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
0 Comments