இலங்கையை தாக்க துவங்கிய புரவி புயல்.


அதிரை டுடே:டிச.02
புரவி புயல் முல்லைத்தீவு மற்றும் திருகோணமலைக்கு இடையில் இலங்கையை தாக்க துவங்கியுள்ளதாக இலங்கை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த புரவி புயல் முல்லைத்தீவு வழியாக மன்னார் சென்று, அங்கிருந்து நாளை அதிகாலை அரபிக்கடலை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், புரவி சூறாவளி கரையைக் கடக்கும்போது மணிக்கு 75 முதல் 85 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும், அதன் பின்னர் அதன் வேகம் மணிக்கு 95 கிலோமீட்டர் வரையில் அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்க படுகிறது.

இதே வேளை, இந்தச் சூறாவளி காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் காற்றுடனான கடும் மழையும் பாதிவாகியுள்ளதுடன் தொடர்ந்தும் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.


நன்றி: ஆதவன் நியூஸ்

Post a Comment

0 Comments

'/>