அதிரை டுடே:டிச.06
அன்பார்ந்த அதிரை சகோதரர்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக.
அதிரையில் மின்னணு வாக்கு இயந்திர எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பாக மின்னணு வாக்கு இயந்திரத்தை தடை செய்ய வலியுறுத்தி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது.
நாம் அனைவரும் மிக முக்கியமான கடமையாக வும் இந்த காலகட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து EVM மிற்கு எதிராக போராடவில்லை என்றால் வரும் காலங்களில் பெரும் துன்பங்களை சந்திக்க நேரிடும். ஆகவே நமதூரில் EVM ற்கு எதிரான ஒறிங்கிணைப்பு குழு சார்பில் எதிர் வரும் 11.12.2020அன்று தக்வா பள்ளியில் இருந்து பேரணியாக புறப்பட்டு நமதூர் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த போராட்டத்தில் கட்சி இயக்கம் பாரமல் அனைவரும் கலந்து கொள்ளும் படி அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
அதிரை சேக்
மாவட்ட செயலாளர்
மனித நேய ஜனநாயக கட்சி,
தஞ்சை தெற்கு
0 Comments