மதுக்கூரில் தமுமுக சார்பில் டிச - 06 பாபர் மசூதி இடிப்பு ஆர்ப்பாட்டம் திளானோர் பங்கேற்பு.


 

அதிரை டுடே:டிச.06

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் தமுமுகவின் மாவட்ட பொருப்பு குழு தலைவர் முகமது சேக் ராவுத்தர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தமுமுக மதுக்கூர் பேரூர் கழக செயலாளர் பைசல் அகமது அவர்கள் வரவேற்புரையாற்ற, கோசங்கள் எழுப்பட்டது. தமிழக மக்கள் விடுதலை கழகம் தங்க குமரவேல், தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் நசுரூதீன் சாலிஹ், திமுக பொருப்பாளர் மகாலிங்கம், மமக மாநில அமைப்பு செயலாளர் காதர் மைதீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளர்கள் இளங்கோ, கோவிந்தராஜ், ஜாமிய மஸ்ஜித் பாரிபாலன கமிட்டியின் தலைவர் முகைதீன் மரைக்காயர், செயலாளர் சேக் அப்துல் காதர், பொருலாளர் லக்கி காதர், மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையின் தலைவர் ஹாஜா மைதீன், மதுக்கூர் மக்கள் நலக்குழு பொருப்பாளர் வஹாப் மற்றும் பல்வேறு தோழமை இயக்கங்கள் அரசியல் கட்சியின் நிர்வாகிகள், ஜமாத்தார்கள், தமுமுக மமக மாவட்ட ,பேரூர் கழக, கிளை, அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக பேரூர் கழக தலைவர் ராசிக் அகமது அவர்கள் நன்றியுரையாற்றினார். பாபரியை மீட்க்கும் வரை.. பாசிசம் வீழும் வரை.. சளைக்காமல் போராடுவோம்.







Post a Comment

0 Comments

'/>