அதிரை டுடே:டிச.05
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த மாநகராட்சி தேர்தலின் வெற்றியை தொடர்ந்து ஊடகங்களுக்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தேசிய தலைவர் அல்ஹாஜ் பாரிஸ்டர் அசதுத்தீன் உவைசி அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் சில அறிக்கைகளை வெளியிட்டார்.
அவ்வறிக்கையில் வெற்றியோ, தோல்வியோ தேர்தலை சந்திப்பேன் அது எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்திய அரசியல் சாசன உரிமை இந்திய முழுவதும் போட்டியிடுவேன் இரண்டு இடங்களை தவிர்த்து. ஒன்று அஸ்ஸாம் அங்கு இஸ்லாமிய கட்சி பத்ருத்தீன் அஜ்மல் அவர்களின் AIDUF நல்ல முறையில் செயல் பட்டு கொண்டு இருக்கிறது. மற்றொன்று கேரளாவில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் இந்த இரண்டு கட்சிகளுக்கும் என்னால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அவர்களுக்கு இந்த ஏழை தேவைப்பட்டால் தொலைபேசியின் முலமாக அழைத்தால் இன்ஷா அல்லாஹ் அங்கேயும் வருவேன்.
அடுத்த சில தினங்களில் மேற்குவங்கம் தேர்தலில் போட்டியிடும் பணிகள் தொடங்குவோம். தமிழகத்தில் கடந்த முறை வாணியம்பாடி என்கிற ஒரு தொகுதியில் போட்டியிட்டோம். இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிடுவோம் என ஊடகங்களின் முலமாக தனது கட்சியினருக்கு வெற்றி விருந்து அளித்துள்ளார்.
0 Comments