ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்து..!

கேரளத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.


துபையில் இருந்து கேரள மாநிலம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று தரையிறங்கியது. அப்போது ஓடுபாதையில் இருந்து சறுக்கி விமானம் திடீரென விபத்துக்குள்ளானது.


இந்த சம்பவத்தில் விமானம் இரண்டு துண்டாக உடைந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


விமானத்தில் இருந்து ஊழியர்கள், பயணிகள் உட்பட 191 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதகாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments

'/>