விடை பெற்றார்கள் தல சின்ன தல இருவரும்..? கிரிக்கெட் பிரியர்கள் அதிர்ச்சி..!

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் ரெய்னா ஆகியோர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் தோனி ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். அதன்பின் டி20மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ந்து விளையாடி வந்தார்.
கடைசியாக தோனி விளையாடிய ஒருநாள் போட்டி கடந்த வருடம் நடந்த உலகக் கோப்பை செமி பைனல் போட்டியாகும். இந்தியா கடும் போராட்டத்திற்கு பின் நியூசிலாந்துக்கு எதிரான இந்த போட்டியில் தோல்வி அடைந்தது.


கடைசி வரை போராடிய தோனி, இந்த போட்டியில் ரன் அவுட் ஆனார். இதுதான் இவர் கடைசியாக விளையாடிய போட்டியாகும்.

அதன்பின் இந்திய அணியில் இருந்து தோனி எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறுவார் என்று செய்திகள் வந்தது. அவர் உலகக் கோப்பை தொடர் முடிந்ததுமே ஓய்வு பெறுவார் என்று செய்திகள் முதலில் வந்தது.

ஆனால் தோனி இன்னும் ஓய்வு குறித்து எதுவும் அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். ஆனால் அதற்குள் கொரோனா காரணமாக இந்திய அணி விளையாட வேண்டிய போட்டிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டது. கொரோனா லாக்டவுன் காரணமாக 6 மாதமாக எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளும் நடக்கவில்லை. அவர் இன்னும் சில நாட்கள் தொடர்ந்து அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் தற்போது ஐபிஎல் போட்டிக்காக தயார் ஆகி வருகிறது. அடுத்த மாதம் ஐபிஎல் போட்டிகள் நடக்க உள்ளது.

இந்த நிலையில் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

2004ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான ரெய்னா, கேப்டன் தோனியின் ஆஸ்தான வீரர்.

தோனி தலைமையிலான இந்திய அணியில் நட்சத்திர வீரராக ஜொலித்தவர் ரெய்னா. தோனியின் வலதுகரமாக திகழ்ந்தார் என்றே கூற வேண்டும். இந்திய அணிக்காக 226 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5615 ரன்களை குவித்துள்ள ரெய்னா, 18 டெஸ்ட் மற்றும் 78 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.

2011ல் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றபோது, அந்த அணியில் முக்கிய பங்காற்றியவர் ரெய்னா. குறிப்பாக முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் அபாரமாக ஆடினார். காலிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த முக்கிய காரணமாக திகழ்ந்த ரெய்னா, அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக ஆடினார். அவரது இந்த இரண்டு சிறப்பான இன்னிங்ஸ்களும் தான் இந்திய அணி, இறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கு காரணமே.

ஃபீல்டிங்கிலும் மிரட்டக்கூடியவர். ஜாண்டி ரோட்ஸுக்கே பிடித்த ஃபீல்டர் ரெய்னா. ஆனாலும் ரெய்னா 2017க்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். இந்திய ஒருநாள் அணியில் மிடில் ஆர்டர் சிக்கல் இருந்த நிலையில், 2019 உலக கோப்பைக்கான மிடில் ஆர்டரி பேட்ஸ்மேனை தேடும் முயற்சியில், ரெய்னாவுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக 2018ல் ஆடிய தொடரை ரெய்னா சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. இதையடுத்து அத்துடன் ஓரங்கட்டப்பட்ட ரெய்னா, அதன்பின்னர் இதுவரை இந்திய அணியில் மீண்டும் நுழைய முடியவில்லை.

சுரேஷ் ரெய்னா தோனியுடன் நெருங்கிய நண்பர் ஐபிஎல் போட்டிகளில் தல சின்ன தல என அழைக்கபடும் இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் ஓய்வை அறிவித்தது. ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments

'/>