குவைத்தில் தமிழர் மர்ம மரணம்..? மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினர் புகார்..!

அதிரை டுடே ஆகஸ்ட்.17 திருவாரூர் மாவட்டத்தில் வசித்த வந்த சாமிநாதன் என்பவரது மகன் வீரமணி (வயது 25). வீரமணி கடந்த 5 ஆண்டுகளாக குவைத்தில் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். 

கடந்த ஜனவரியில் தாயகம்  திரும்பியுள்ளார்.

ஜனவரி மாதம் வீட்டிற்கு வந்து, சில நாட்களுக்கு அடுத்தபடியாக மீண்டும் குவைத்திருக்கு சென்றுள்ளார். 

14/08/2020 அவரது அலைபேசியில் இருந்து குடும்பத்தினரிடம் பேசிய நபர்கள், வீரமணி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.


அவர் எப்படி இறந்தார்? என்ற தகவலை தெரிவிக்காமலேயே போனை துண்டிக்கவே, வெளிநாட்டில் இருந்த உறவினர்கள் மூலமாகவும் தகவலை தெரியப்படுத்தி கேட்டுள்ளனர். ஆனால் எந்த விதமான தகவலும் கிடைக்கவில்லை.

இதனால் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி, வீரமணியின் உடலையாவது இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் வழங்கியுள்ளனர். அப்பகுதி மக்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Post a Comment

0 Comments

'/>