அதிரை டுடே ஆகஸ்ட்.19 தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் 1, 6 மற்றும் 9 வகுப்புகளுக்கான சேர்க்கை திங்கள்கிழமை முதல் தொடங்கியது.
தமிழகம் முழுவதும் சமூக இடைவெளியுடன் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் சேர்க்கை சுமார் 10 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருக்கும் இடங்களை விட அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழக ஆசிரியர் சங்கத் தலைவர் பி.கே.இளமாறன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், குறிப்பாக 9 ஆம் வகுப்புக்கு அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளது. நகரத்தின் பல அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சாதகமான குறிப்பில் தொடங்கியுள்ளது. என்று தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில் தனியார் பள்ளிகளில் சேர்க்கை முதல் நாளில் சரியாக இல்லை என்றும், இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகக் குறைவாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரொனா வைரஸ் ஏற்படுத்திய பொருளதார தாக்கம் இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
அதிரை மக்கள் பெரும்பாலும் வளைகுடா பொருளதாரத்தை சார்ந்து இருக்கின்றனர்.
வளைகுடாவையும் விட்டு வைக்காத கொரொனா வைரஸ் வளைகுடா நாடுகளிலும் கடும் பொருளதார நெருக்கடியை ஏற்படுத்தி விட்டது.
வளைகுடா நாடுகள் தற்பொழுது பொருளதாரத்தை சீர் செய்யவும் தம் குடிமக்களுக்கான வேலை வாய்ப்பை உருதி செய்யவும். பொருளதார சீரமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதில் இந்தியர்கள் மிகவும் பாதிக்கபட்டு வருகின்றனர். வேலையின்மை சம்பள பிரச்சனை பணி ஆட்கள் குறைப்பு நடவடிக்கை போன்ற நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலில் நமதூர் வாசிகளின் பொருளதாரம் மிகவும் பாதிக்கபடும் ஆபாயம் உள்ளது.
நமதூர் தனியார் பள்ளிகள் UKG LKG வரை 5000 முதல் 15000 வரை கட்டணங்களும் 1 முதல் 5 வகுப்பு வரை 10000 முதல் 20000 வரையிலும் இப்படியே வகுப்புகள் மாற மாற இரண்டு மூன்று சைபர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வாகன கட்டணம் டியூசன் பீஸ் என்றும் மேலும் பணத்தை பிள்ளைகளின் கல்விக்காக நமதூர் தாய்மார்கள் தரளமாக செலவிட்டு வந்தார்கள் முந்தைய காலங்களில் அதை நாம் தவறாக குறிப்பிடவில்லை. மறாக அரசு பள்ளிகளின் கல்வி தரம் சொல்லும்படியாக இல்லை என்று ஒரு கருத்து நிலவுகிறது. உண்மையில் நமதூர் மக்கள் தங்கள் பிள்ளைகளை அங்கு சேர்த்து அவர்களின் கல்வி தரத்தில் குறைபாடு கண்ட பெற்றோர்கள் எத்தனை பேர் என்று நாம் சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.
அவங்க பிள்ளை அங்க படிக்குது நம்ம பிள்ளை அங்கு தான் படிக்க வேண்டும் என்றும் அந்த பள்ளிகளில் படித்தால் தான் நம் பிள்ளைகள் சாதிக்க முடியும் என்றும் உங்கள் பிள்ளைகளின் திறமை திறன் ஆகியவற்றை குறைத்து மதிப்பிடமால் நமதூர் தந்தையர்களின் பொருதாரம் இட்டுவதில் உள்ள சிரமத்தை அறிந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும்.
கொரொனா தாக்கத்தில் இருந்து நமது பொருளதாரம் மீள குறைந்தது 2 வருடங்கள் ஆகும் என பொருளதார நிபுணர்கள் வல்லுணர்களும் கருத்து தெரிவித்து வருவதை கருத்தில் கொண்டு நமது ஊர் நமதூர் பொற்றோர்கள் தம் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன் வருவார்களா..?
அல்லது தனியாரை நோக்கியே படை எடுப்பார்களா..?
என்பதை பொருத்து இருந்து பார்ப்போம்...
0 Comments