இமாம் கொடூர கொலை..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி ரஹ்மத்  பள்ளியில் கடந்த 9ஆண்டுகளுகளாக  இமாமத் செய்து வந்தவர்   ஹாபிழ் முஹம்மத் சதாம் ( 30 வயது)
த/பெ முஹம்மத் பாரூக் அவர்கள் 13:08:2020 மக்ரிப் பிறகு அடையாளம் தெரியாத இருவர் வந்து துஆ ஓத அழைத்து சென்றதாக கூறப்படுகிறது;

ஆனால் அவர் திரும்பி வரவில்லை சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் மூலம்  பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்
 14:08:2020 அன்று  கொடூரமான முறையில் கொலை செய்து ஏரியில் வீசப்பட்டுள்ள நிலையில்  அவருடைய ஜனாஸா காவல்துறையால் கைப்பற்றப்பட்டு முண்டியம்பாக்கம்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது; இமாம் ஒருவருடைய படுகொலை மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யார் கொலை செய்தார்கள்; கொலைக்கான காரணம் என்ன போன்ற விசயங்கள் இன்னும் தெரியவில்லை.

படுகொலை செய்யப்பட்டுள்ள இமாம் முஹம்மத் சதாம் அவர்களுடைய  உடன் பிறந்த சகோதரர் மவ்லவி ஜுபைர் அவர்கள் தியாகதுருகத்தில் இமாமத்  செய்து வருகிறார்.
அவர் தற்போது தம்பி மரணத்திற்கு நீதி கேட்டு நிற்கிறார்.

படுகொலை செய்யப்பட்டுள்ள இமாம் முஹம்மத் சதாம் அவர்களுக்கு மனைவி இரண்டு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் இருக்கிறார்கள்.

இந்த கொலைக்கு நீதி கேட்டு இஸ்லாமிய இயக்கங்களின் நிர்வாகிகள் ஜமாத்தார்கள் களத்தில் இறங்கியுள்ளார்கள்.
கொலையாளிகள் கைது செய்யப்பட வேண்டும்  கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றுள்ளார்கள்
நீதி கிடைக்கும் வரை ஜனாஸாவை பெற்றுக்கொள்ள 
மாட்டோம் என அறிவிப்பு செய்துள்ளார்கள்.

 காவல்துறை விசாரித்து வருகிறது
இமாம் அவர்களுடைய  மக்ஃபிரதிற்காக துஆ செய்யவும்.

அல்லாஹ் அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினர் உற்றார் உறவினர்கள் நண்பர்களுக்கு உறுதியையும் அமைதியையும் வழங்கிடுவானாக! ஆமீன்.

Post a Comment

0 Comments

'/>