அதிரை மஜக சார்பில் சுதந்திர தின கொடியேற்ற நிகழ்வு.

அதிரை டுடே:ஆக.15

அதிரை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நமது நாட்டின் 74 வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 இன்று கொடியேற்ற நிகழ்வு இரு இடங்களில் நடைபெற்றது.


மஜக சார்பில் பழைய பேஸ்டாபீஸ் தெரு தீன் மெடிக்கல் அருகில் தஞ்சை தெற்கு மாவட்ட பொருப்பு குழு உறுப்பினர் அதிரை சேக் அவர்களும், மனிதநேய ஜனநாயக தொழிற்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் அதிரை நகர மஜக நகர செயலாளர் அப்துல் சமது அவர்களும் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினர்.

இதில் நகர பொருளாளர் அஸ்ரப், நகர து. செயலாளர்கள் ஹாஜா மர்ஜுக், அஹமது அஸ்கர், நகர தொழிற்ச் சங்க செயலாளர் முகமது ஆரிப், நபில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

'/>