குவைத்தில் தமிழகத்தை சேர்ந்த தந்தை மகன் உயிர் இழப்பு..!

அதிரை டுடே நீயூஸ் ஆக.2: குவைத்தில் இந்திய தமிழகத்தைச் சேர்ந்த மகன், தந்தை மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது:
குவைத்தின் Wafra என்ற பகுதிகளில் அரபி ஒருவர் தோட்டத்தில் வேலை செய்து வந்த இந்திய தமிழகத்தைச் தந்தை மற்றும் மகன் ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் பெரம்பலூர் மாவட்டம், வெப்பம்தட்டை, கௌளேரிபாளையம் தாலுக்கா, நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த  சேகர் (வயது-57) மற்றும் 
ரகுநாத் (வயது-25) ஆகியோர் இறந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த இந்த மரணம் குறித்து தற்போது அவர்கள் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. 

உடல்நலக் குறைவு காரணமாக Al-Jahra மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த தந்தை மரணமடைந்த தகவல் கேட்டு அந்த அதிர்ச்சியில் மகனும் மரணமடைந்தார் என்ற துயரமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அவர்கள் குடும்பத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

'/>