அதிரையில் SDPI கட்சியில் மேலும் நான்கு கிளைகள் கட்டமைப்பு.


அதிரை டுடே:ஜூலை.20
அதிரை எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிரை நகர தலைவர் S.அஹமது அஸ்லம் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் M.முஹம்மது புகாரி கலந்து கொண்டார். அதிரையில் SDPI கட்சி இரண்டு கிளைகள் செயல்பட்டு வந்த நிலையில் மேலும் நான்கு கிளைகள் இன்று கட்டமைக்கப்பட்டு கிளைகளுக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

கிளை பொறுப்பாளர்கள் :
1. நூருல் அமீன்,நிசார்
2.அசாருதீன்,இதிரீஸ்
3. சாகுல் ஹமீது, அபுதாஹிர்
4. சேக் தாவூத் ஆகியோரை பொறுப்பாளர்களாக மாவட்ட தலைவர் M. முகமது புகாரி அவர்களால் நியமிக்கப்பட்டார்கள்..

இக்கூட்டத்திற்கு நகரச் செயலாளர் SM. சாகுல் ஹமீது மற்றும் நகர இணைச் செயலாளர் C.அஹமது. MSC மற்றும் நகர பொருளாளர் NM. சேக் தாவுது மற்றும் நகர செயற்குழு உறுப்பினர்கள் AJ. அசாருதீன் மற்றும் M. ஜர்ஜிஸ் அஹமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

'/>