வழிபாட்டு தலங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி..!



ஜூலை 6ஆம் தேதி முதல் கிராமப்புறங்களில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் 1.7.2020 முதலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகள் மற்றும் மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 6.7.2020 முதலும் கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது:

ஜூலை 6 ஆம் தேதி முதல் கிராமப்புறங்களில் உள்ள சிறிய திருக்கோயில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோயில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாலயங்களிலும் மட்டும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும்.

இத்தகு வழிபாட்டுத்தலங்களில் சமூக இடைவெளி மற்றும் பிற நோய் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும், கிராமப்பகுதிகளில் உள்ள பெரிய வழிபாட்டுத் தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.

கோயில்களில் கட்டுப்பாடுகள்:

வழிபாட்டுத் தலங்களுக்குள் செல்லும் முன் கைகளையும் கால்களையும் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
வழிபாட்டு தலங்களில் தேங்காய், பூ, பழம், தீர்த்தம், பிரசாதம் போன்றவற்றை வழங்க அனுமதி இல்லை.
எந்தவித அறிகுறியும் இல்லாதவர்கள் மட்டுமே வழிபாட்டு தலங்களில் அனுமதிக்க வேண்டும்.
கீழே விழுந்து வணங்குவது அங்கப்பிரதட்சணம் செய்வதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும்.
மேற்கண்ட விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments

'/>