மஹாராஷ்டிராவில் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்ய ஏற்பட்ட தடையால் 9மாவட்டங்களுக்கு காய்கறிகளின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது:


அதிரை டுடே:ஜூலை,02

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதாலும் மதுரையிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாலும் மஹராஷ்டிராவில் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்ய மதுரை மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதனால் மதுரை மற்றும் அங்கிருந்து கொள்முதல் செய்யும்  9 மாவட்டங்களில் காய்கறிகளின் விலை உயரும் அபாயம்  ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை, திண்டுக்கல்,ராமநாதபுரம்,புதுக்கோட்டை,நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஒட்டுமொத்த காய்கறி தேவையையும் மதுரை சென்ட்ரல் மார்க்கெட் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.

திருவனந்தபுரத்திற்கும் இங்கிருந்தே காய்கறிகள் கொண்டு செல்லப்படும். தற்போது மகாராஷ்டிராவில் தொற்று அதிகரித்து வருவதால் அங்கிருந்து காய்கறிகளை கொள்முதல் செய்ய வேண்டாமென வியாபாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதன் காரணமாக வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றின் விலை உயரக்கூடும். சென்ட்ரல் மார்க்கெட்டிற்கு மகாராஷ்டிராவில் இருந்தே அதிக அளவு காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன.
மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும் காய்கறிகள் விலை உயரும் அபாயமும்
 தட்டுப்பாடும் ஏற்படலாம்.

Post a Comment

0 Comments

'/>