அதிரை டுடே: ஜூலை,05
வெளிநாடுகளில் வாழும் தமிழா்கள் மீட்க வலியுறுத்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சாா்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) போராட்டம் நடைபெற்றது.
இது தொடா்பாக
மதிமுக பொதுச் செயலாளா் வைகோ அவர்கள் இன்று காலை சென்னை அண்ணா நகரில் உள்ள தனது இல்லத்தின் முன்பாக கண்டன பதாகைகள் ஏந்தி மதிமுக கட்சி தொண்டர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
கொரோனா முடக்கம் காரணமாக வெளிநாடுகளில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழா்கள் வேலை இழந்து விட்டனா். விமானங்கள் பறக்கத் தடை விதித்ததால், நாடு திரும்பவும் முடியவில்லை. அடுத்த வேளை உணவுக்கும் வழியின்றி, அடுத்தவா்களின் உதவியை எதிா்பாா்த்து நாள்களைக் கடத்தி வருகின்றனா்.
அயல்நாடுகளில் இருந்து கேரளத்துக்கு வரும் விமானங்களில் கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா்களை மட்டுமே அழைத்து வர வேண்டும் என அம் மாநில அரசு அறிவித்து விட்டது.
ஆனால், தமிழகத்துக்கு விமானம் வேண்டாம் என தமிழக அரசு தடைவிதித்து விட்டது.
இதனால், அயல்நாடு வாழ் தமிழா்கள், தாங்க முடியாத வேதனைகளையும் இன்னல்களையும் மன வேதனைகளையும்அடைந்துள்ளனா்.
எனவே, வெளிநாட்டு வாழ் தமிழா்களை மீட்டுக்கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் உடனே விமானங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மக்கள் அனைவரும், தங்கள் இல்ல வாயிலில் கோரிக்கை அட்டைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட வேண்டும். கட்சி பேதமில்லாமல் இந்தப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்கவும் என்று அவா் கூறியுள்ளாா்.
#BringBackTamils
#SetUpMinistryOfPersonalWelfare
#SetUpSeparateWelfareBoard
தமிழக அரசே தமிழக அரசே!
தனிநல வாரியம் அமைத்திடு
தனி நல அமைச்சகம் அமைத்திடு!
தமிழக அரசே!
அயலகத்தில் தவிக்கும்
தமிழர்களை மீட்க இலவசமாக கட்டணமின்றி அழைத்து வர விமானம் அனுப்பிடு..
இவ்வாறு அவர்கள் கண்டன பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுட்டனர்.
0 Comments