குவைத் அரசு அதிரடி உத்தரவு..! புதிய விசா அனைத்தும் ரத்து..!

குவைத் விமான நிலையம் கொரோனா காரணமாக  மூடப்படுவதற்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து வகையான விசாகள் ரத்து:


புதிய தகவல் வெளியாகியுள்ளது.......

குவைத்தின் விமான நிலையம் மூடப்படுவதற்கு முன்னர் வழங்கப்பட்ட விசிட் விசா, குடும்ப விசா அல்லது பணியாளர் விசாக்கள் உள்ளிட்ட அனைத்து வகையான புதிய விசா உடையவர்கள் நாட்டிற்குள் வாராமல் இருந்தால் அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஒரு உறுதிப்படுத்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது, ​​அந்த வகையான புதிய விசாக்கள் உள்ளவர்கள் குவைத்துக்குள் நுழையவோ அல்லது அவர்களின் விசாவின் காலத்தை புதுப்பிக்கவோ எந்த வழியும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது குவைத்தில் விசா வழங்கும் பிரிவு மூடப்பட்டுள்ளது என்றும், அடுத்த அறிவிப்பு வரை புதிய விசா வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இருப்பினும், ஏற்கனவே புதிய விசாக்களில் குவைத்துக்குள் நுழைந்தவர்களுக்கு தங்குவதற்கான அனுமதியை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குவைத்தில் இருந்து விடுமுறைக்கு தாயகம் சென்ற வெளிநாட்டவர்களின் விசா காலாவதியானால், அவர்கள் செல்லுபடியாகும் பாஸ்போர் வைத்திருந்தால் அவர்கள் விசாவினை தங்களது ஸ்பான்சர் மூலம் புதுப்பித்தல் செய்து கொள்ளலாம் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Note: இது அரசுத் துறை, தனியார் துறை மற்றும் குடும்ப விசாக்கள் அல்லது சுய ஸ்பான்சர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

புகைப்படம் பதிவுக்காக மட்டுமே பதிவிறக்கம் செய்யப்பட்டது.

Post a Comment

0 Comments

'/>