அதிரை சிறுவன் மீது கொலை வெறி தாக்குதல்? குற்றவாளிகள் தலைமறைவு!


அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த ஆனா.மூனா. அலி முகமது மகன் அஜ்மல் கான் (வயது 17) அவர்கள் பாபுலர் ஃப்ரண்ட் அமைப்பில் இருந்து பயணித்துள்ளார்.


இந்நிலையில் மேற்கண்ட அமைப்பில் கையாடல் செய்ததாக அஜ்மல் கான் அவர்களை அழைத்து விசாரித்தின் அடிப்படையில் அந்த சிறுவனை மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு உள்ளார்.


இது குறித்து அந்த சிறுவனின் மாமா அப்துல் காதர் பேசிய ஆடியோவில் மேற்கண்ட அமைப்பில் பயணிக்கும் ஹாஜா மைதீன், முகமது தம்பி, முகமது ரிலா ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு ஒருவரை கைது செய்த காவல்துறை மற்ற இருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.


இச்சம்பவம் குறித்து மேற்க்கண்ட அமைப்பினர் கொடுத்துள்ள விளக்கத்தில் ரிலா அவர்களின் கடையில் இரு கட்டங்கலாக 66100 பணம் காணாமல் போனதாகவும் அஜ்மல் கான் வீட்டில் 1 லட்சம் மதிப்புள்ள நகைகள் காணாமல் போனதாகவும் இது குறித்து காவல்துறை விசாரனையில் அஜ்மல் கான் திருடியதாக குறிப்பிடப்பட்டு உள்ளதோடு இந்த சம்பவத்திற்கும் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்புக்கும் சம்மந்தம் இல்லை என குறிப்பிடப்பட்டு உள்ளது.


சமுதாயத்திற்கு பாதுகாப்பாக இருக்க கூடியவர்கள் தங்கள் சொந்த அமைபில் இருந்தவருக்கு இதுபோல் அநீதி இழைத்து இருப்பது அதிரை மக்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தவறு யார் செய்தாலும் அதற்கு சம்மந்தப்பட்ட நபரின் நெருங்கியவர்களுக்கோ அல்லது முஹல்லா ஜமாத்திற்கோ அல்லது காவல் துறைக்கோ தெரியபடுத்தி இருக்க வேண்டும். நிச்சயம் தவறுக்கு உரிய தண்டனை கிடைத்து இருக்கவும் வேண்டும்.

இது குறித்து மேற்கண்ட அமைப்பின் நிர்வாகிகளோ அல்லது மேல்மட்ட நிர்வாகிகளோ இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அதிரை மக்கள் பலரின் கேள்விக்கு பதிலாக அமையும்.

Post a Comment

0 Comments

'/>