அதிரை டுடே:ஜூலை.01
அதிரை நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மூன்றாம் கட்டமாக கபசுர குடிநீர் வினியோகம் 01/07/2020 இன்று காலை செக்கடி பள்ளிவாசல் மற்றும் கடைத் தெரு பகுதிகளில் சமூக ஆர்வலர் சாதலி அவர்கள் தலைமையில் நகர பொருளாளர் அஷ்ரப் அவர்கள் முன்னிலையில் பொதுமக்கள், வணிகர்கள், ஓட்டுனர்கள் உட்பட 300 க்கும் அதிகமானோருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட து. செயலாளர்கள் சாகுல் ஹமீது (ஸ்மார்ட்), அதிரை சேக், நகர செயலாளர் அப்துல் சமது, நகர து.செயலாளர்கள் அகமது அஸ்கர், ஹாஜா மர்ஜூக், இளைஞர் அணி செயலாளர் ஜகுருல் ஹக், தொண்டரணி செயலாளர் நபில், ஹைதர் அலி ஆலிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments