அதிரை டுடே:ஜூன்.30
தஞ்சாவூர் மாவட்டம்,சம்பைபட்டிணத்தில் SDPI கட்சி கொடி கம்பத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
கடந்த சிலநாட்களுக்கு முன் கட்சியின் துவக்க தினத்தை கொண்டாடினர்.அப்போது புதியதாக ஏற்றப்பட்ட கொடியினை இரவோடு இரவாக கிழித்து கம்பத்திற்கு அருகே வீசி சென்றுள்ளனர்.இதனால் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யப்பட்டதாக கட்சியின் கிளை தலைவர் முத்துமரைக்கான் குற்றம் சாட்டுகின்றார்.
இச்சம்பவத்தை அடுத்து சம்பைபட்டினம் SDPI கட்சியின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் இணைந்து சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.இதனை விசாரிப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
0 Comments