புதுப்பட்டினத்தில் முறையற்ற மின் கட்டண கணக்கீடு! மின் வாரிய அதிகாரிகளை சந்தித்த SDPI நிர்வாகிகள்.


அதிரை டுடே:ஜூன்.20
SDPIகட்சி புதுப்பட்டினம்_ கிளை நிர்வாகிகள் நாடியம் மின்சாரதுறை அதிகாரிகளை சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு.



புதுப்பட்டிணம் கிராமத்திற்கு மின்சார கட்டணம் சரி பார்த்து கணக்கிட வந்த அமுல்ராஜ் என்பவர் அனைவருடைய வீட்டிலும் இதுவரை இல்லாத அளவிற்கு மின்சார தொகையை அதிகபடுத்தி குறித்து சென்றுள்ளார் என்ற தகவல் SDPI கட்சி நிர்வாகத்திற்கு இன்று 20-06-2020 வந்தது அதன் அடிப்படையில் உடனடியாக தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் Y.ஔரங்கசீஃப், மற்றும் M.S.D. முகமது சுல்தான்
கிளை செயலாளர் தலைமையில்
SDPI கிளை நிர்வாகிகள் நமது பகுதிக்கு உட்பட்ட நாடியம் மின்சார துறையை சார்ந்த அதிகாரி சூசை வருவாய் மேற்பார்வையாளர் அவர்கள் மற்றும் கணக்காளர் பக்கிரிசாமி ஆகிய அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதின் அடிப்படையில் , " சூசை வருவாய் மேற்பார்வையாளர் அவர்கள் சொல்லியது போல் செயல்படாமல் மின்சார யூனிட் கணக்கிட வந்த அமுல்ராஜ் அவருடைய இஷ்டத்திற்கு கணக்கிட்டு வந்துள்ளார் என்ற சில கூடுதலான தகவலையும் நமக்கு தந்துள்ளார்கள்..



கொரோனா நோய் கிருமி தொற்றின் அச்சத்தால் தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பொருளாதாரம் இல்லாமல் மக்கள் சிரம படுவதையும் அதிகாரிகளிடம் தெளிவாக எடுத்து சொல்லி இரண்டு கோரிக்கையை வலுவான முறையில் வைத்துள்ளோம்.




1.புதுப்பட்டினத்தில் அனைவருடைய வீட்டிலும் மின்சார கட்டணம் அதிக தொகை குறிக்க பட்டுள்ளது.

2.மின்சார கட்டணம் குறித்து அனைவருடைய வீட்டிலும் மறுபடியும் முறையாக கணக்கிட்டு சரியான தொகையை விரைந்து குறிக்கப்பட வேண்டும் என்று கூறி வலியுறுத்தியுள்ளோம்.

அதன் அடிப்படையில் SDPI - கட்சி புதுப்பட்டினம் கிளை நிர்வாகத்தின் சார்பில் நாம் அளித்திருக்கும் புகார் மனுவை மின்சார துறையின் நமது பகுதிக்கு உட்பட்ட உயர் அதிகாரிகளான உதவிமின்பொறியாளர் ஸ்ரீராம் AE மின்பொறியாளர் மாறன் ( E) இவர்களுடைய கவணத்திற்கு கொண்டு சென்று உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுப்போம் என்று நமக்கு வாக்குறுதி அளித்து உள்ளார்கள்.

முயற்சி வெற்றிபெற தொடர்ந்து ஒன்றினைந்து களம் காண்போம்

என்றும் மக்கள் பணியில்.
SDPI கட்சி புதுப்பட்டிணம் கிளை
தஞ்சை தெற்கு மாவட்டம்

Post a Comment

0 Comments

'/>