அதிரை டுடே:ஜூன்.21
SDPI கட்சியின் மக்களுக்கான அரசியல் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்போம்!
அன்பார்ந்தவர்களே அனைவருக்கும் SDPI கட்சியின் உதய தின (ஜூன்.21) நல்வாழ்த்துகள்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 11 ஆண்டுகாலம் என்பது எஸ்.டி.பி.ஐ. கட்சியை பொருத்தவரை கொள்கை அடிப்படையினாலான மிக பாரதூரமான போராட்டக் காலமாகும். இந்த போராட்டக் காலத்தில் மக்களை அணி திரட்டுவதில் எஸ்.டி.பி.ஐ. கட்சி வெற்றிபெற்றுள்ளது.
இந்த 11 ஆண்டு காலத்தில் அரசியல் களத்தில் புதுமையான செயல்திட்டங்களை வகுத்து, புரட்சிகரமான கருத்துக்களை விதைத்து, அரசியலில் புதிய அணுகுமுறையை உண்டாக்கி, இந்திய அளவில் புதிய திருப்பத்தை உண்டாக்கியது எஸ்.டி.பி.ஐ. கட்சி என்றால் மிகையாகாது.
இந்திய மக்களில் சாமானியர்களின் அடிப்படைத் தேவைகளைக் கண்டுணர்ந்து, அவற்றை ஆள்வோரின் கவனத்திற்கு கொண்டுவரும் பொருட்டு, “பசியிலிருந்து விடுதலை” - “பயத்திலிருந்து விடுதலை” எனும் இரண்டு முழக்கங்களை தேசமெங்கும் ஓங்கியொலித்தது.
அன்பான செயல்வீரர்களே, பொருளாதாரத்தில் மிகப்பெரும் வளர்ச்சியில் நாடு உள்ளது என்று ஆட்சியாளர்களால் தம்பட்டம் அடிக்கும் நமது தேசத்தில் தான் கோடிக்கணக்கான மக்கள் பசிபட்டினியால் வாடுகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் பசியுடன் தூங்கச்செல்கின்றனர். பல நூறு கிலோ மீட்டர் நடந்து செல்கின்றனர். இந்த கொரோனா பெருந்துயர் காலக்கட்டத்தில் அதனை நாம் கண்கூடாக கண்டுணர்ந்தோம்.
இதோடு மட்டுமில்லாமல் சமூக வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் பயம் என்பது சன்னஞ்சன்னமாக ஊடுருவியுள்ளது. மதவாத பாசிச சக்திகளால் மக்களின் அன்றாட செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு, அவர்களை அச்சுறுத்த அனைத்து முறைகளையும் கையாண்டு பயத்தின் கோரப்பிடியில் வைக்கப்பட்டுள்ளனர்.
அநீதிக்கெதிரான போராட்டங்கள் தேசத்திற்கு எதிரானதாகவும், நீதிகேட்டு எழுப்பப்படும் குரல்கள் தேசவிரோதமாகவும், பசியின் கொடுமையால் எழும் அவலக் குரல்கள் தேசப்பாதுகாப்பிற்கு எதிரானதாகவும் கருதப்படுகிறது.
நாட்டின் கார்ப்பரேட் நிறுவனங்கள் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் கைப்பற்றியதோடு மட்டுமில்லாமல் அரசோ நாட்டின் உண்மையான பொருளாதார நிலையை மறைத்து உண்மைக்கு புறம்பான தகவல்களை நாட்டு மக்களுக்கு அளிக்கிறது.
நாட்டின் சில பணமுதலைகளுக்கு மட்டுமே சாதகமாக விளங்கும் வங்கிகள், கடன்களைச் செலுத்தாமல் நாட்டைவிட்டு ஓடுபவர்களுக்கு துணைப்புரியும் புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை கடைப்பிடித்து வருகின்றன. புதிய தாராளமயப் பொருளாதாரம் என்பது ஆளும் அரசியல்வாதிகளின் வாரிசுகள் நாட்டின் பொக்கிஷத்தை கொள்ளையடிக்கும் தந்திரமாகவே பயன்படுகிறது.
ஆகவே, நாட்டைச் சீரழிக்கும் மதவாதம், பாசிச அரசியல் ஒட்டுண்ணிகள், கார்ப்பரேட் அரசியல் தரகர்களை ஒழித்துக்கட்ட மக்கள் ஒன்றுதிரண்டு எதிர்த்துப் போராடும் காலகட்டம் இது என்பதை எஸ்.டி.பி.ஐ. கட்சி உறுதியாக நம்புகிறது.
உலகையே அச்சுறுத்தும் கொரோனா பேரிடரும், அரசின் திட்டமிடப்படாத நடவடிக்கைகளும் மக்களை வாட்டி வதைக்கும் நிச்சயமற்ற இந்த காலக்கட்டத்தில், அராசங்கம் கைவிட்ட நிலையிலும் மக்களை பாதுகாக்க நாம் மேற்கொண்ட செயல்பாடுகள் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அத்தகைய மக்களுக்கு நம்பிக்கையூட்டும் செயல்பாடுகளில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
மிகவும் இக்கட்டான இந்த கொரோனா வைரஸ் தொற்று காலகட்டத்தில் நாம் தேவையுடையோருக்கு உதவிடுவோம். நமது நிவாரணப் பணிகளை அதிகப்படுத்துவோம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை சமூக இடைவெளியுடன் விநியோகிப்போம். அச்சத்தின் பிடியில் இருக்கும் மக்களுக்கு ஆறுதலாய் இருப்போம். நமது கட்சியின் மக்களுக்கான அரசியல் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்போம் என கேட்டுக்கொள்கின்றேன்.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் Our politics is for a cause not for a career. ஆம், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அரசியல் என்பது ஏதோ ஒரு ஆதாயத்திற்கானது அல்ல. அது குடிமக்களிடத்திலிருந்து பசி மற்றும் பயத்தினை போக்கி உண்மையான அரசியலின் பக்கம் அணி திரளச் செய்யும் இலட்சியத்திற்கானது.
நாட்டின் அரசியலில் சமத்துவம், நீதி, பண்பாட்டை பாதுகாக்க இதுவொன்றே (SDPI) சிறந்த வழியாகும். இதற்கு மக்களிடம் அடிமட்ட அளவிலான மாற்றத்தை உருவாக்குவதே காலத்தின் கட்டாயமாகும். எனவே மக்கள் விரும்பும் சிறந்த இந்தியாவை கட்டமைக்கவும், மேலும் கொரோனா அற்ற தேசத்தை உருவாக்கவும் ஒன்றிணைந்து நாம் பாடுபடுவோம்.
இப்படிக்கு
நெல்லை முபாரக்
மாநில தலைவர்
SDPI கட்சி, தமிழ்நாடு

0 Comments