சாத்தான் குளம் விவகாரத்தில் குற்றம் செய்த போலீசார்களை தூக்கிலிட வேண்டும். என ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ ஆவேசக் கருத்து:



அதிரை டுடே:ஜூன்29

"நிர்பயா கற்பழிக்கப்பட்டபோதும் இப்படித்தான் பிறப்புறுப்பில் இரும்பு தடியை கொண்டு செருகினர்.. அதுபோலவே, பென்னிக்சின் ஆசன வாயில் தடியை செருகி, குடைந்து தாக்கி உள்ளனர்..
நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தூக்கிலிட்டதைபோலவே, தூத்துக்குடி வழக்கில் போலீசார் குற்றவாளிகளாக இருந்தால் தூக்கிலிட வேண்டும்" என்று கர்ஜித்துள்ளார் மார்க்கண்டே கட்ஜு!

ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தமிழக மக்களுக்கு மிக நெருக்கமானவர்

இவர் ஜல்லிக்கட்டு விவகாரம் முதல், ரஜினி அரசியல் விவகாரம் வரை நிறைய கருத்துக்களை துணிந்து சொன்னவர்
இப்போது சாத்தான்குளம் விவகாரத்துக்கு கொதித்து போய் கருத்து சொல்லி உள்ளார்... உண்மையிலேயே இந்த விவகாரம் இந்த அளவுக்கு பூதாகரமாக வெடித்து கிளம்பும் என்று தமிழக அரசு சத்தியமாக நினைக்கவில்லை.. சில கொடூர குணம் படைத்த போலீஸ்காரர்களால் அரசு பதில் சொல்ல வேண்டிய நிலைமைக்கு ஆளாகி உள்ளது. என இவ்வாறு அவர் கூறியுள்ளார்..

Post a Comment

0 Comments

'/>