அதிரை டுடே:ஜூன்.29 அதிரை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று 29/06/2020 திங்கள்கிழமை இரண்டாம் கட்டமாக காலை சேது ரோடு பிஸ்மி மெடிக்கல் அருகில் நகர து.செயலாளர் மர்ஜூக் அவர்கள் தலைமையில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் விதமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீர் பொதுமக்கள், வணிகர்கள், ஓட்டுனர்களுக்கு வழங்கினர். இதில் 300 க்கும் அதிகமானவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மா.து.செயலாளர்கள் சாகுல் ஹமீது (ஸ்மார்ட்), அதிரை சேக், நகர செயலாளர் அப்துல் சமது, நகர பொருளாளர் அஷ்ரப், நகர இளைஞர் அணி செயலாளர் ஜபருல் ஹக், அஹமது அஸ்கர், நபில் ஆகியோர் கலந்து கொண்டு கபசுர குடிநீர் வழங்கினர்.
மஜகவின் சேவைகளை பாராட்டி தன்னெழுச்சியாக இளைஞர் ஒருவர் மஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments