அதிரை டுடே:ஜூன்.09
அதிரையில் கார் மற்றும் வேன் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கேரிக்கைகளை வலியுறுத்தி பேருந்து நிலையத்தில் சமூக இணையதள போராட்டம் ஓட்டுநர் சங்கத் தலைவர் கருப்பன் சேக்தாவூது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் 144 தடை உத்தரவு விதித்த காலத்தில் சாலை வரி கேட்பது நியாயமா?
தடை விதித்த காலத்தில் வாகன கடன்களுக்கு அபராத வட்டியை ரத்து செய்யவும்.
ஓட்டுநருக்கான நல வாரியத்தை அமைக்கவும்.
நல வாரியத்தில் இல்லாத ஓட்டுநருக்கு வாழ்வாதார இழப்பீடு நிதியை வழங்கவும்.
அனைத்து வாகன உரிமையாளருக்கும் மானியத்துடன் அரசு கடன் வழங்கிடவும்.
இன்சூரன்ஸ் நிருவனத்தின் மூலம் பேரிடர் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் அதிரை கார் வேன் ஓட்டுநர் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் சமூக இணைய தள போராட்டம் நடைபெற்றது.
தகவல்
அதிரை கார் வேன் ஓட்டுநர் உரிமையாளர் சங்கம்.
0 Comments