அதிரையில் இடதுசாரி கட்சிகள் சார்பில் போராட்டம்.


அதிரை டுடே:ஜூன்.09
இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் கொரோனா நிவாரன நிதி வழங்க கோரி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற்றது.

அதனடிப்படையில் அதிரையில் இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் Kஹாஜா மைதீன் தலைமையில் நடைபெற்றது.

மத்திய மாநில அரசுகள் சார்பில் அனைத்து குடும்பங்களுக்கும் ₹12500 வழங்கிடவும்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மத்திய அரசு சொந்த செலவில் அனுப்பி வைக்க கோரியும்.

விவசாயிகளின் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய கோரியும்.

புதிதாக கொண்டு வரும் மின்சார வாரிய ஆணைய சட்டம் அமுல்படுத்தப்பட்டால் இலவச மின்சாரம் ரத்தாகும் ஆகையால் மேற்படி சட்டத்தை ரத்து செய்ய கோரியும்.

நூறு நாள் வேலையை 200 நாள் உயர்த்தியும், கூலியை உயர்த்தி வழங்கிட கோரியும் போராட்டம் நடைபெற்றது.

இதில் நகர து.செயலாளர் S.பன்னீர் செல்வம், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் A.H.பஷீர் அஹமது, M.சுப்பிரமணியன். E.முகமது பாரூக், F.நிஜாமுதீன், S.மீரா சாஹிப் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

'/>