நாம் தமிழர் கட்சியில் இருந்து ஜியாவுதின் நீக்கமா..?
நாம் தமிழர் கட்சியில் புதிய நகர செயளாலர் நியமனம்..!
நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் இ.தேவராஜ், தொகுதிச் செயலர் ஏ.நெல்சன் பிரபாகரன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, அதிராம்பட்டினம் பேரூர் கட்சியின் பழைய நிர்வாகம் முற்றிலும் கலைக்கப்பட்டது. அதிராம்பட்டினம் பேரூர் புதிய செயலாளராக மீ.ஜெஹபர் சாதிக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் புதிய நிர்வாகம் அமைப்பதற்கும் இவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிரை நகர நாம் தமிழர் கட்சி சார்பில் புதிய நகர செயளாலர் ஆக மீ. ஜெகபர் சாதிக் அவர்கள் மாநில நிர்வாகத்தால் நியமனம் செய்யபட்டுள்ளார். அவர்களுக்கு அதிரை டுடேயின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
முந்தைய நாம் தமிழர் அதிரை நகர நிர்வாகம் முழுமையாக கலையபட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ள நிலையில் முன்னாள் அதிரை நகர செயளாலர்.ஜியாவுதீன் அவர்கள் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கபட்டார..?
அல்லது கட்சியில் இருந்தே நீக்கபட்டரா...?
என்பதற்க்கு விடையில்லமாலே முடிகிறது அந்த அறிக்கை.
இது சம்மந்தமாக உள்ளூர் வாட்ஸ் ஆஃப் களில் சிலர் விளக்கம் கேட்டாலும் அதற்க்கான பதிலை அளிக்க யாரும் முன்வரவில்லை.
சில நாட்களுக்கு முன் நடந்த உள்ளூர் வாட்ஸ் ஆஃப் தளங்களில் நடந்த நாம் தமிழர் பற்றிய விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசி உள்ளூரிலே சிலரால் கடுமையாக சாடபட்டவர் யாருக்கு ஆதரவாக பேசி வந்தரோ அவர்களே இன்று ஒரம் கட்டியிருப்பது உண்மையிலே வருத்தமான நிகழ்வு.
ஜியாவூதின் அவர்கள் போன்ற சமுதாய சிந்தனையாளர்கள் இனியாவது சிந்திக்கட்டும் அனைத்து அரசியல் கட்சிகளும் செயல்பாடுள்ள இஸ்லாமிய இளைஞர்களை கருவேப்பில்லையாகவே பயன்படுத்துகின்றனர். என்று
இது ஒரு விழிப்புணர்வு பதிவு தானே தவிர யாரையும் குறை கூறும் பதிவு அல்ல
சம்மந்தபட்ட கட்சி இது சம்மந்தமாக விளக்கம் கொடுத்தால் அதை பதிவு செய்யவும் அதிரை டுடே தவறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
1 Comments
ஜியாவுதீன் அவர்களின் எண் தேவை
ReplyDelete