தமிழக அரசின் அலச்சிய போக்கால் அநியாயமாக ஒரு உயிர் பழியானது வேதனை அழிக்கிறது. மஜக மாநில பொருளாலர் ஹாருண் ரசீது அவர்கள் அதாங்க பதிவு
#சென்னை_ஐஐடி_தனிமைப்படுத்துதல்_முகாமில்...
#கூத்தாநல்லூர்_முகம்மது_ஷரீப்_மரணம்...
உலகை உலுக்கும் கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு நாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்கள் நாடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். சென்னைக்கு வரும் தமிழகத்தை சேர்ந்த பயணிகள் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள விஐடி கல்லூரி வளாகத்தில் உள்ள தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 12.6.2020 அன்று மலேசியாவில் இருந்து வந்த மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது அவர்களும், ஐக்கிய சமாதானப் பேரவை பொதுச்செயலாளர் முஜிபுர் ரகுமான் பாக்கவி அவர்களும் இந்த முகாமில் தங்கியுள்ளனர்.
மலேசியாவிலிருந்து வந்த கூத்தாநல்லூரைச் சேர்ந்த முஹம்மது ஷரீப் என்பவருக்கு 13.6.2020 அன்று மாலை உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. யாரும் சிகிச்சை அளிக்க வராத சூழலில் இன்று (14.6.2020 ) காலை மீண்டும் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது மீண்டும் அதிகாரிகளிடம் சிகிச்சைக்கு கோரிக்கை வைத்தும் சிகிச்சை அளிக்கப்படவில்லை.
இன்று ( 14.6.2020 ) மாலை சுமார் 7.30 மணி அளவில் முகமது ஷெரீப் அவர்கள் ரத்த வாந்தி எடுக்க, உடனடியாக அருகிலிருந்த திருநெல்வேலி ஏர்வாடியைச் சேர்ந்த மீரான் மைதீன் அவர்கள் மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது அவர்களிடம் வந்து நடந்த சம்பவங்களை கூறினார். உடனடியாக அவர் தங்கி இருந்த மாடிக்கு சென்று பொருளாளர் அவர்கள் பார்க்கும் பொழுது முகமது ஷரீப் அவர்கள் குளியல் அறையில் மயங்கி விழுந்து கிடந்தார்.
உடனடியாக வளாகத்தில் இருக்கும் அதிகாரிகளிடம் சென்று நடந்த சம்பவங்களை கூறி சிகிச்சைக்கு கோரிய மஜக பொருளாளர் மேலதிகாரிகளையும் தொடர்பு கொண்டு நடவடிக்கைக்கு வலியுறுத்தினார்.
இரவு 9 மணிக்கு ஆம்புலன்ஸ் வந்தது. முகமது சரீப் அவர்களை பரிசோதித்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் முகமது ஷரீப் அவர்களின் மருமகன் சுல்தான் அவர்களை தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை கூறி விரைவில் இறந்த உடலை பெற்று ஊருக்கு அனுப்பி வைக்கிறோம் என்றும் குடும்பத்தார் பொறுமை காத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் கூறினார்.
அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் அநியாயமாக ஒரு உயிர் பலியாக்கப்பட்டது வேதனையிலும் வேதனை.



0 Comments