அதிரை டுடே:ஜூன்.20
நாடு முழுவது கொரேனா நெருக்கடி கால கட்ட சூழலில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நகர செயலாளர் என்.காளிதாஸ் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் ஏ.ஹெச்.பஷீர் அஹமது, எஸ்.மீரா சாஹிப், எம்.முகமது இக்பால் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு பெட்ரோல் விலை ரூ 30க்கும், டீசல் விலை 25 க்கு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
0 Comments