அதிராம்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ..!

நீதியின் கேலிக் கூத்தை தோலுரிப்போம் ..!
பாதிக்கப்பட்டவர்களே ..



குற்றவாளியாக்கப்படுகிறார்கள் ..!
மத்திய அரசே ..!
உ.பி மற்றும் டெல்லியில் உன் ஃபாசிச போலீஸ் ராஜ்யத்தை நிறுத்து ..!
என்ற முழக்கத்தோடு இன்று (13/06/2020) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தேசம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 3 இடங்களில் தக்வா பள்ளி அருகிலும், ஈ.சி.ஆர் சாலை அருகிலும், பழைய போஸ்ட் ஆபீஸ் அருகிலும், கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் நோட்டீஸ் பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் அவர்களும், நாம் தமிழர் கட்சியின் நகரத் தலைவர் ஜியாவுதீன் அவர்களும், த.மு.மு.க நகர தலைவர் சலீம் அவர்களும், ம.ஜ.க மாவட்ட துணை செயலாளர் சேக் அவர்களும், மிஷ்கின் பள்ளி முன்னாள் நிர்வாகி அன்சர் கான் அவர்களும், தரகர் தெரு இளைஞர் மன்ற முன்னாள் நிர்வாகி முகைதீன் அவர்களும் கலந்து கொண்டனர்.

இப்படிக்கு 
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
அதிரை ஏரியா,தஞ்சை தெற்கு மாவட்டம்.

Post a Comment

0 Comments

'/>