இது குறித்து நாம் அந்த கிராமத்தினரிடம் கேட்டபோது, சம்பவ இடத்தில் இருந்து நம்மிடம் பேசிய கிராம இளைஞர்கள் பயங்கர அதிர்வோடு சத்தம் கேட்டது. அப்போது வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்த போது ராணுவ விமானம் போல ஒரு விமானம் பறந்து போனது. அதன் பிறகு மேலவசந்தனூர் கண்மாய் பக்கமாக புகை வந்தது. போய் பார்த்தால் கன்மாயில் இருந்த சீமைக்கருவேல மரங்கள், புல் எரிந்தது.
அங்கு விமானமோ, விமானத்தின் பாகங்களோ இல்லை. அந்தப்பகுதியில் ஆடு, மாடு மேய்த்தவர்களும் விமானம் வந்து போன போது அதிக சத்தம் வந்தது. அப்போது ஏதோ பொருள் விழுந்தது போல இருந்தது. அதன் பிறகு கன்மாய்யில் கருவேல மரங்கள் எரிந்து புகை வந்தது என்றும் சொல்கிறார்கள் என்றனர்.
இது குறித்து அதிகாரிகள் தரப்பில், சூப்பர்சோனிக் விமானம் வந்து சென்றுள்ளது. ஆனால் விபத்து இல்லை. ஆனால் வேறு எங்கோ நடந்த விமான விபத்து படங்களை போட்டு தகவல்கள் பரப்பப்படுகிறது. விமான விபத்து என்பது வதந்தி என்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியில் விமான விபத்து ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தி வெறும் வதந்தியே என மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே உள்ள பேயடி கோட்டை பகுதியில் ராணுவ விமானம் ஒன்று பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்ததாகவும் அந்த விமானம் தீப்பற்றி எரிவதாகவும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக செய்தி பரவியது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பெரும் பதட்டம் அடைந்து விசாரணையை துவக்கியது. ஆனால் அது தவறான தகவல் என தற்போது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆவுடையார் கோயில் அருகே விமான விபத்து ஏற்பட்டதாக பரப்பப்படும் செய்தி தவறான செய்தி. அதுபோல் எந்தவித சம்பவமும் நடக்கவில்லை. அதிகாரிகள் விபத்து நடந்ததாக கூறப்படும் கண்மாயில் சோதனை செய்துள்ளனர் அங்கு காய்ந்த மரங்கள் மட்டுமே எரிந்து உள்ளதாகவும் விமான விபத்து நடந்ததற்கான எந்தவிதமான உதிரி பாகங்களும் இல்லை என்று கூறியுள்ளனர். எனவே இவ்வாறு பொய்யான செய்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்பட்ட இந்த தவறான செய்தியால் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தின் முன்னணி நீயூஸ் சேனல் ஒன்று வெடித்தது ராணுவ ஹெலிக்காப்டர் என்றும் அதில் 6 பேர் பயணம் செய்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பிடதக்கது.
0 Comments